ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் அடித்து 2வது முறையாக பாகிஸ்தானை தோற்கடிக்க உதவினர். அப்போட்டியில் பாகிஸ்தானை ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய இந்தியா முதல் 10 ஓவரில் 105 ரன்கள் அடித்தது. அதைப் பார்த்த எதிரணி ரசிகர்கள் இந்திய அணி பாகிஸ்தானை வெறித்தனமாக அடித்ததாக பாராட்டினர்.
3 கேட்ச் ட்ராப் 45 ரன்கள்:
ஆனால் தம்மைப் பொறுத்த வரை அன்றைய நாளில் இந்தியா சுமாராக விளையாடியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் 3 முக்கிய கேட்சுகளை தவற விட்ட இந்திய அணியின் நம்பர் ஒன் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவரில் 45 ரன்கள் வாரி வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி வெல்லும் அளவுக்கு பாகிஸ்தானை விட தரத்தில் இந்தியா சிறந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய சிறந்த தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் அன்றைய நாளில் பும்ரா அதிக ரன்கள் வழங்கிய பவுலராக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அன்றைய நாள் அவருக்கு நன்றாக இல்லை. அது போக இந்தியா 3 கேட்ச்கள் தவற விட்டது. இதிலிருந்து அவர்கள் தங்களுடைய தகுதிக்கு குறைவாகவே செயல்பட்டனர் எனலாம்”
இந்தியாவின் பலம்:
“அதையும் தாண்டி அவர்கள் பாகிஸ்தானை கச்சிதமாக வென்றனர். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் உள்ள திறமையின் இடைவெளியைக் காட்டுகிறது. பாகிஸ்தான் கடந்த முறையை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களிடம் கொஞ்சம் ஸ்பார்க் இருந்தது. ஆனால் அதைக் கையாண்ட இந்திய பவுலர்கள் நம்மை மீண்டும் போட்டிக்குள் எடுத்து வந்தனர்”
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என தகவல்.. என்ன ஆனது? – பேக்கப் யார்?
“ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையில் போதுமான ஆழமில்லை. மறுபுறம் அபிஷேக், கில், திலக் ஆகியோர் சேர்ந்து போட்டியை முடித்தனர். இது நமக்கு திறமையான வீரர்கள் வரம்பின்றி கிடைக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. அது இந்தியா தங்களது கிரிக்கெட்டை விளையாடாவிட்டாலும் பாகிஸ்தானை விட எந்தளவு சிறந்தவர்கள் என்பதையும் காட்டுகிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா எந்தளவுக்கு வல்லமைக் கொண்டுள்ளது என்பதும் தெரிகிறது” என்று கூறினார்.



