ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் 172 ரன்களை துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 74, சுப்மன் கில் 47 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை பந்தாடி முக்கிய பங்காற்றினர்.
முன்னதாக அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் அரை சதத்தை அடித்த போது இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாடினார். மேலும் ஹரிஷ் ரவூப் ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற போலியான கருத்தை சைகையாக செய்து காட்டி இந்தியாவை கிண்டலடித்தார். அது போக ஷாஹீன் அப்ரிடி, ரவூப் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் திண்டடினார்கள்.
இந்தியாவை சீண்டினால்:
அதனால் ஸ்லெட்ஜிங் செய்து அவுட்டாக்க முயற்சித்த அவர்களுக்கு அபிஷேக் – கில் கேட்டாலும் வாயாலும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அமைதியான தங்களை பாகிஸ்தான் சீண்டினால் இந்தியா வெளுக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா வெற்றி பெற்று முன்னேறுகிறது என்பதே நம்முடைய மாயாஜாலமாகும்”
“ஆனால் நேற்று நாம் நிறைய ஆக்ரோசம் மற்றும் பேச்சுக்களைப் பார்த்தோம். அவர்கள் சொல்லக்கூடாத விஷயங்களை சொன்னதாக அபிஷேக் ஷர்மா போட்டியின் முடிவில் தெரிவித்தார். அதனாலேயே நீங்கள் (பாகிஸ்தான்) பேசுங்கள் நாங்கள் (இந்தியா) வெல்கிறோம் என்று பாகிஸ்தான் பற்றி இந்திய வீரர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டர்கள் எதற்காகவும் பாதிக்கப்படாமல் எதையும் சொல்லாமல் அமைதியுடன் நம்முடைய கிரிக்கெட்டை விளையாடுகின்றனர்”
பதிலடியாக இந்தியா வெளுக்கும்:
“அதற்காக நீங்கள் ஆஸ்திரேலியர் அல்லது பாகிஸ்தானி உட்பட யாராக இருந்தாலும் எது சொன்னாலும் நாங்கள் அமைதியாக செல்வோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் எங்களுடைய பேட்டில் பதில் கொடுப்போம். 2022 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் தோற்ற போது அது பற்றி நான் உட்பட இந்தியாவைச் சேர்ந்த யாரும் ஊடகங்களில் பேசவில்லை. ஏனெனில் உங்களுடைய வெற்றி தோல்வி எங்களுக்கு முக்கியமல்ல”
இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர்தான்.. அவர் எல்லா பார்மேட்லயும் விளையாடனும் – நவ்ஜோத் சிங் சித்து கருத்து
“ஆனால் எங்களை சீண்டினால் உங்களை அப்படியே விடமாட்டோம். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவும் போது நேற்று ஃபர்கான் அப்படி கொண்டாடுகிறார். ஆஸ்திரேலியாவில் ஹரிஷ் ரவூப்பிடம் பேசுகையில் நல்லவரைப் போல் தெரிந்தார். ஆனால் நேற்று அவர் செய்த விஷயங்கள் தேவையற்றது” என்று கூறினார்.



