அந்த இந்திய அணியில் கூடவா ருதுராஜ்க்கு இடமில்லை? அகர்கரின் அநியாயத்தை சாடிய ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக 2021, 2023 ஐபிஎல் தொடர்களில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் சிஎஸ்கே கோப்பைகளை வெல்ல உதவினார். அதனால் இந்திய அணியிலும் அறிமுகமான அவர் 2023 கௌகாத்தி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருதுராஜ் தலைமையில் களமிறங்கி அசத்திய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இருப்பினும் கடந்த வருடம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ரசிகர்கள் விமர்சித்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் காயமடைந்த அவர் முழுமையாக விளையாடவில்லை.

- Advertisement -

புறக்கணிக்கும் அகர்கர்:

தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் சமீபத்தில் நடைபெற்ற 2025 துலீப் கோப்பை செமி ஃபைனலில் மேற்கு மண்டலத்துக்கு எதிராக 184 ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ விளையாடும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டிகளில் அவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கழற்றி விட்டது.

அடுத்ததாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக இந்தியா ஏ அணியிலும் ருதுராஜ் கழற்றி விடப்பட்டுள்ளார். அதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தேர்வுக்குழு தொடர்ந்து ருதுராஜை கழற்றி விடுவது நியாயமில்லை என்று விமர்சித்தனர். இந்நிலையில் இந்தியா ஏ அணியில் கூடவா? ருதுராஜ்க்கு இடமில்லை என்று அகர்கர் முடிவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ருதுராஜ்க்கு இடமில்லையா:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கௌகாத்தியில் சதத்தை அடித்துள்ளார். டெக்னிக்கல் அளவில் கச்சிதமான வீரரான அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அவருடைய தலைமையில் நாம் ஆசியப் போட்டிகளை வென்றோம். பல பெயர்களுக்கு மத்தியில் உங்களுடைய பெயர் தொலைந்து போவது ஒரு சிறிய கேலிக்கூத்து”

இதையும் படிங்க: ஐசிசி அம்பயர் மன்னிப்பு கேட்டாரு பாருங்க.. பாகிஸ்தான் வெளியிட்ட உருட்டு.. உடைத்த இந்திய ரசிகர்கள்

“இந்திய அணியில் அவருடைய பெயர் இல்லாததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்தியா ஏ அணி விளையாடும் ஒருநாள் போட்டிகளில் கூட அவருடைய பெயர் இல்லாதது சரியல்ல என்று நான் நினைக்கிறேன். அவருடைய பெயர் எங்காவது இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு சிறந்த வீரரை ஒவ்வொரு விஷயத்திலும் இழக்க முடியாது. அதையே நானும் உணர்கிறேன்” என்று கூறினார்.

Advertisement