அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைச்சா ரெக்கார்டு கன்பார்ம்.. அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

Arshdeep Singh
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஓமன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங் :

இந்நிலையில் இந்த ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஓய்வெடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா தற்போது ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 72 போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் 1 விக்கெட்டை வீழ்த்தினாலே மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர் மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் சர்வதேச டி20 அரங்கில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி உலகளவில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்துவார். இன்னும் இந்த சாதனைக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் விளையாடும் பட்சத்தில் அதே போட்டியில் அந்த சாதனையை அவர் செய்வார் என்பது உறுதி.

இதையும் படிங்க : ஓமன் அணிக்கெதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்க திட்டம் – அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார்?

இந்த தொடரினை பொருத்தவரை இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று விளையாடி வரும் வேளையில் நிச்சயம் பும்ராவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் தான் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிகிறது.

Advertisement