ஓப்பனிங் ஆடல தான்.. ஆனா அவரால் முடியாததுன்னு ஒன்னுமில்ல.. சஞ்சு சாம்சனுக்கு – அசிஸ்டன்ட் கோச் ஆதரவு

Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த பல தொடர்களாகவே இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனால் 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும் அவரே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த சுப்மன் கில் மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கான டி20 அணிக்கு கம்பேக் கொடுத்திருந்தார்.

சஞ்சு சாம்சனால் எந்த இடத்திலும் அசத்த முடியும் : பேட்டிங் கோச் பேட்டி

அதுமட்டும் இன்றி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டதால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் மீண்டும் துவக்க வீரராக டி20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியிலும் அவரே துவக்க வீரராக களமிறங்கி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுப்மன் கில்லின் வருகையால் அவரது இடம் பறிபோகும் என்று பேசப்பட்டது. ஆனால் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படாமல் பேட்டிங் ஆர்டரை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பழக்கமே இல்லாத மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் எப்படி விளையாடப்போகிறார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், நான்காவது இடத்தில் திலக் வர்மாவும் விளையாடுவார்கள் என்பதால் சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சஞ்சு சாம்சன் மிடில் ஆடரில் களமிறங்கினாலும் மிகச் சிறப்பாக விளையாடுவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சித்தான்சு கோட்டக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் பெரும்பாலும் பேட்டிங் செய்ததில்லை தான். ஆனால் அவரால் அதை செய்ய முடியாது என்று அர்த்தமல்ல.

இதையும் படிங்க : “விராட் பாஜி”, ” வி மிஸ் யூ” ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி இல்லாதது குறித்து – ஓமன் கேப்டன் உருக்கம்

அவருக்கு ஓப்பனராக மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எந்த வரிசையில் விளையாடினாலும் அவர் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வீரர். அவரால் நிச்சயம் எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி மகிழ்ச்சியாக பேட்டிங் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement