பாகிஸ்தானின் அந்த சவாலை சமாளிப்பது.. இந்தியாவுக்கு கஷ்டமா இருக்கும்.. பேட்ஸ்மேன்களை எச்சரித்த மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அவ்விரு அணிகளை பொறுத்த வரை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 8 ஆசியக் கோப்பைகளை வென்று நடப்புச் சாம்பியனாக திகழ்கிறது. பாகிஸ்தானை காட்டிலும் இந்திய அணியில் தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர்.

அதனால் இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெறும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் சுழலுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் பாகிஸ்தானிடம் முகமது நவாஸ், சூபியன் முஹீம், அப்ரார் அஹ்மத், சாய்ம் ஆயுப் போன்ற நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதனால் பாகிஸ்தானின் ஸ்பின்னர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தானின் சவால்:

எனவே இம்முறை பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வது கட்டாயம் என்று தெரிவிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியின் இந்த பவுலிங் கூட்டணியை நான் விரும்புகிறேன். அந்த அட்டாக் இந்திய பேட்ஸ்மேன்களை கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க வைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது”

“இதற்கு முன் இந்தியா உலகத் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளது. ஆனால் அந்தப் போட்டிகளை காட்டிலும் இம்முறை பாகிஸ்தானிடம் வித்தியாசமான பவுலிங் அட்டாக் இருக்கிறது. இம்முறை அவர்களிடம் அதிகமாக வேகம் இல்லை. அதை வாசிம் அக்ரம் வெறுப்பார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பேட்டிங் முன்னேற வேண்டும்”

- Advertisement -

மஞ்ரேக்கர் கருத்து:

“இருப்பினும் தம்மிடம் உள்ள வளங்களைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் அதிகமாக பயன்படுத்துவதற்கு பாராட்டுக்கள். ஏனெனில் கடந்த காலங்களில் சாய்ம் ஆயுப் பாகிஸ்தானுக்காக அரிதாகவே பவுலிங் செய்வார். ஆனால் தற்போது அவர் ஆட்டத்தில் 90% பந்து வீசுகிறார். இந்த புதிய அணுகுமுறை சுவாரசியமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியும் புத்துணர்ச்சியுடன் ஏதோ ஒரு விஷயத்தை வித்தியாசமாக முயற்சிக்கிறார்கள்”

இதையும் படிங்க: “விராட் பாஜி”, ” வி மிஸ் யூ” ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி இல்லாதது குறித்து – ஓமன் கேப்டன் உருக்கம்

“அவர்களுடைய புதிய அணுகு முறையில் முதல் 6 – 8 ஓவர்களில் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வேகம் இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மற்ற அனைத்தும் சுழலாக இருக்கும் என்பது சிறப்பானது” என்று கூறினார். மறுபுறம் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுக்க இந்தியாவிடமும் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement