ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாடியிருந்தது. அந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 57 ரன்களில் சுருட்டி 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து அந்த இலக்கினை சேசிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபிஷேக் சர்மாவை வாழ்த்திய அவரது தந்தை :
அதற்கடுத்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர வேண்டும் என்பதற்காக தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
எப்போதுமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்றால் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும். அந்த வகையில் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் போட்டியிலேயே 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 30 ரன்கள் குவித்து அதிரடி காட்டியிருந்தார்.
அதேபோன்று எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அதே அதிரடியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தனது மகனை வாழ்த்திய அபிஷேக் சர்மாவின் தந்தை சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து அவர் பேசியதாவது :
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பது உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாக எப்போதுமே இருந்து வருகிறது. இந்த தொடரில் பிசிசிஐ என் மகனுக்கு வாய்ப்பு வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். அவர் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கும் அமையும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளிலும் நான் இதை செய்ய தயார்.. தனது விருப்பத்தை தெரிவித்த – ஷிவம் துபே
அதோடு ஆசிய கோப்பையை கைப்பற்ற என் மகன் நிச்சயம் தனது பங்களிப்பை வழங்குவார் என அவரது தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 193 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 565 ரன்கள் குவித்து அட்டகாசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



