இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா நேற்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக டி20 போட்டிகளில் பொருத்தவரை முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பவுலரே முதல் ஓவரை வீசிவந்த வேளையில் நேற்றைய போட்டியில் மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு ஹார்திக் பாண்டியா முதல் ஓவரை வீசியிருந்தார்.
அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவாங்க : இர்பான் பதான்
மேலும் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் இரண்டாவது முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் ஹார்டிக் பாண்டியா இந்த போட்டியில் செயல்பட்டிருந்தார். இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசியிருந்த அவர் 10 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்த வேளையில் மேலும் அவர் பந்துவீச தேவையின்றி ஆட்டம் நிறைவடைந்தது.
இருந்தாலும் இனிவரும் போட்டிகளில் ஹார்டிக் பாண்டியா பந்துவீச வேண்டியது அவசியமாக இருக்கும் வேளையில் அவரை ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சாளராக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஹார்டிக் பாண்டியாவால் தொடர்ந்து 6 யார்க்கர்களை வீச முடியாது என்றும் அவருக்கு பதிலாக முதன்மை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவின் பலம் ஏக்கர் வீசுவதா? அவரால் 6 யார்க்கர்களை ஒரு ஓவரில் வீச முடியுமா? நிச்சயம் அவரால் அது முடியாது.
அவருடைய முழு பலமே பந்துவீச்சில் பவுன்சர்களை பயன்படுத்துவது, ஹார்ட் லென்த்தில் வீசுவது, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது என அதில் மட்டுமே இருக்கும். அதனால் அவரை ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக கருத முடியாது. அதேவேளையில் அர்ஷ்தீப் சிங்கால் மிகச் சிறப்பாக யார்க்கர் வீச முடியும். அதுமட்டும் இன்றி அவரிடம் இருக்கும் ஸ்லோவர் பந்துகள், வேரியேஷன்கள் என அனைத்தும் சிறப்பான ஒன்று. அதனால் ஹார்டிக் பாண்டியாவை முழுமையாக நம்பாமல் அர்ஷ்தீப் சிங்கையும் பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டும் என இர்ஃபான் பதான் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : ஒரே மேட்ச் தான்.. ரிங்கு சிங்கின் சோளியை முடித்த ஷிவம் துபே.. பாவம் பா அந்த தம்பி – விவரம் இதோ
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இங்கிலாந்து தொடரிலேயே அர்ஷ்தீப் சிங் விளையாடியிருக்க வேண்டும் ஆனால் அவருக்கு அங்கு வாய்ப்பு தரப்படவில்லை. எனவே இந்த ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தால் மட்டுமே அவர் சரியான ரிதத்தில் இருப்பார் என இர்ஃபான் பதான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



