ஒரே ஓவரில் ஐக்கிய அரபு அமீரக அணியின் சோளியை முடித்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

Kuldeep Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது முதல் இன்னிங்சை மிகச் சிறப்பாக முடித்துள்ளது.

குல்தீப் யாதவின் சூழலில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அணி :

- Advertisement -

இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய ஐக்கிய அரபு அமீரக அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்யாமல் வெறும் 13.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது.

அதனை தொடர்ந்து 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 2.1 ஓவர் பந்துவீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதேபோன்று ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இரண்டு ஓவர்கள் பந்துவீசி நான்கு ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மற்றபடி பும்ரா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக இருந்த ஐக்கிய அரபு அமீரக அணியை ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் வீழ்த்தினார் என்று கூற வேண்டும். ஏனெனில் முதல் 8 ஓவர்களின் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 47 ரன்கள் எடுத்து ஓரளவு டீசன்டான நிலையில் இருந்தது.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா இருக்கும்போதே முதல் ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியா – திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

ஆனால் ஒன்பதாவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் அந்த ஓவரில் 3 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அதன்பின்னர் எந்த ஒரு இடத்திலும் ஐக்கிய அரபு அமீரக அணியால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. இறுதியில் அந்த அணி கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 12 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement