எப்படியும் தோற்க தான் போறீங்க.. இந்திய அணியிடம் சண்டையிடுங்க.. பலத்தை பாராட்டிய அக்தர், மிஸ்பா

Shoaib Akhtar
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 8 ஆசிய அணிகள் களமிறங்கியுள்ளன. இம்முறை அத்தொடர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் நோக்கத்தில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது.

அத்தொடரில் பாகிஸ்தான் அணி தங்களுடைய நம்பிக்கை நட்சத்திரங்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இல்லாமல் களமிறங்க உள்ளது. 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்வதற்கு அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் அதைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

- Advertisement -

4க்கு 3 வெற்றி:

அதனால் பொறுமையிழந்த பாகிஸ்தான் வாரியம் அவர்களை கழற்றி விட்டு சல்மான் ஆகா தலைமையில் புதிய அணியை அறிவித்தது. அவருடைய தலைமையில் தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் வென்றது. அப்படியே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை வென்று பாகிஸ்தான் அசத்தியது.

இருப்பினும் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 தொடரில் தோற்ற பாகிஸ்தான் சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் ஃபைனலில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த வகையில் சல்மான் ஆகா தலைமையில் கடைசியாக விளையாடிய 4 தொடர்களில் பாகிஸ்தான் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே ரிஸ்வான், பாபர் இல்லாமலேயே ஆசியக் கோப்பையை வெல்வோம் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் சவால்:

மேலும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் நடப்புச் சாம்பியன் இந்தியா கோப்பையை வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் விளையாடும் சிறந்த கிரிக்கெட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துவங்கினோம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஆசியக் கோப்பை: 94 ரன்ஸ்.. ஹாங்காங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்.. 2016ஐ மிஞ்சி பெரிய சாதனை வெற்றி

“அணியாக நல்ல சேர்ந்து நன்றாக விளையாடும் எங்களுக்கு விஷயங்கள் கூடி வருகிறது. எனவே ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்காக நாங்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளோம். டி20 விளையாட்டில் யாருமே வெற்றியாளர் என்று போட்டிக்கு முன் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கே ஓரிரு ஓவர்களில் போட்டி தலைகீழாக மாறும். சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பெற்ற வெற்றி எங்களுக்கு தயாராக நல்ல இடத்தை வழங்கியது. அதே போல ஆசியக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே எங்களுடைய மனநிலை” என்று கூறினார்.

Advertisement