ஆசிய கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு கண்டிப்பா இந்த சவால் இருக்கும் – பரத் அருண் பேட்டி

Bharat Arun and Arshdeep Singh
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் நம்பர் 1 பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கிறார்.

அர்ஷ்தீப் சிங்கிற்கு சவால் காத்திருக்கு : பரத் அருண்

எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முதல் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வாய்ப்பினை பெறாத அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடயிருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சில சவால்களை நிச்சயம் எதிர்கொள்வார் என்று தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது உண்மைதான்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவர் சில மாதங்களாகவே மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் இருந்து வருகிறார். இது அவருடைய ரிதத்தை நிச்சயம் ஆசிய கோப்பை தொடரில் பாதிக்கும். என்னதான் பயிற்சியின்போது அவர் பந்துவீசி வந்தாலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது முக்கியம். அப்போதுதான் வீரர்களின் ரிதம் சரியாக இருக்கும்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயரை 2026இல் கழற்றி விடத் தான்.. இப்போவே கம்பீர் டாப் 5ல கூட சேர்க்காம விட்ருக்காரு.. டிகே விளாசல்

ஆனால் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத அவர் தொடர்ந்து மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் இருந்து வருகிறார். இது அவருடைய பந்துவீச்சு லைன் மற்றும் லென்த்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சவாலை எதிர்கொண்டு இந்த தொடரில் அவர் எவ்வாறு செயல்படப்போகிறார்? என்பதை காண ஆவலாக உள்ளதாகவும் பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement