அவங்களை பந்தால் உடம்பில் அடிக்க சொன்ன ரிஷப் பண்ட்.. 20117இல் பயமற்ற கீப்பரா கிடைச்சாரு.. சஞ்சய் பங்கர் பேட்டி

Sanjay Bangar
- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் 2016 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். அத்துடன் உள்ளூரிலும் சிறப்பாக விளையாடிய அவருக்கு 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல் இப்போது வரை அவர் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தவில்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் அதிக சிக்ஸர்கள் மற்றும் சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்த அவர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

- Advertisement -

பயமற்ற ரிஷப் பண்ட்:

சமீபத்திய இங்கிலாந்து தொடரில் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சும் அளவுக்கு அசத்தி வரும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடும் பாணியைக் கொண்டுள்ளார். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தது பலரையும் ஆச்சரியமடைய வைத்தது.

இந்நிலையில் களத்தில் ரிஷப் பண்ட் மிகவும் பயமின்றி விளையாடக்கூடியவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வலைப்பயிற்சியில் பவுலர்களை வேண்டுமென்றே தம்முடைய உடம்பில் அடிபடுமாறு பவுலிங் செய்ய சொல்லி அவர் பயிற்சிகளை எடுப்பார் என்றும் பங்கர் கூறியுள்ளார். 2017இல் ரிஷப் பண்ட் அறிமுகமான காலம் பற்றி அவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நல்ல விக்கெட் கீப்பர்:

“ரிஷப் பண்ட் மிகவும் நல்ல வீரர் என்பதால் வேகமாக முன்னேற்றமடைவார் என்று ஆஷிஸ் நெஹ்ரா சொல்லி கேட்டேன். அவர் இயற்கையாகவே பரிசளிக்கப்பட்ட பேட்ஸ்மேன். அதே சமயம் அவர் பயமற்றவர். அவருடைய பயமற்ற குணத்தின் முதல் அறிகுறியை வலைப்பயிற்சியிலேயே பார்த்தேன்”

இதையும் படிங்க: இலங்கை மியூசியத்துக்கு விராட் கோலி கொடுத்த பரிசு.. திறமை, மனிதாபிமானம் பற்றி அம்பயர் தர்மசேனா பதிவு

“அங்கே பெரும்பாலும் அவர் வேகமான பந்துகளை வீசி தன்னுடைய உடலை அடிக்குமாறு பவுலர்களிடம் சொல்வார். அது போன்ற மனநிலை சில பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே இருக்கும். அந்த காலகட்டத்தில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடத் துவங்கினார். எனவே நெஹ்ராவின் மதிப்பீடு சரியானது. அவரிடம் நாங்கள் நீண்ட காலம் கழித்து டாப் 5க்குள் பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பரை கண்டோம்” என்று கூறினார்.

Advertisement