ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடி கோப்பையை வெல்வதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியினர் துபாயில் பயிற்சிகளைத் தொடங்கினர். முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளேயிங் லெவனில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்வார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தார்கள். ஏனெனில் நீண்டகாலம் மிடில் ஆடரில் விளையாடி தடுமாறிய அவருக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் ஒருவழியாக சிறப்பாக விளையாடி 3 சதங்களை அடித்த சாம்சன் இந்திய அணியில் தமக்கான இடத்தை பிடித்தார்.
லேசான காயம் மட்டுமே:
ஆனால் தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்மன் கில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. 3, 4வது இடங்களில் திலக் வர்மா, கேப்டன் சூரியகுமார் விளையாடுவார்கள். 6, 7வது இடங்களில் ஆல்ரவுண்டர்கள் ஹர்டிக் பாண்டியா, அக்சர் பட்டேல்/ரிங்கு/துபே விளையாடுவது உறுதியாகியுள்ளது.
காலியாக உள்ள விக்கெட் கீப்பர் இடத்தில் 2025 ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி ஆர்சிபி முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவிய ஜிதேஷ் சர்மா களமிறங்க தகுதியானவராக உள்ளார். அதனாலேயே வேறு வழியின்றி சாம்சன் பெஞ்சில் அமர வேண்டுமென்று அஸ்வின் தெரிவித்தார். இருப்பினும் சாம்சன் 3 அல்லது 5, 6வது விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் சுனில் காவாஸ்கர், முகமது கைஃப் ஆகியோர் கேட்டுக் கொண்டார்கள்.
சாம்சனின் சிக்னல்:
இந்நிலையில் துபாயில் பயிற்சி செய்து கொண்டிருந்த சாம்சன் தன்னுடைய காலில் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்துள்ளார். அதனால் முழுமையாக பயிற்சி செய்ய முடியாமல் தடுமாறிய அவர் நொண்டிக்கொண்டே நடந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இதை வைத்தே சாம்சனை கழற்றி விட்டு விடுவார்களே சமூக வலைதளங்களில் அச்சம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் கீப்பர் இல்லை.. ஜிதேஷ் சர்மா தான் முதல் சாய்ஸ்.. பயிற்சியில் அரங்கேறிய நிகழ்வு – விவரம் இதோ
ஆனால் அது லேசான காயம் மட்டுமே என்று தற்போது தெரிய வந்துள்ளது. அந்த லேசான காயத்துக்கு முதலுதவிகளை எடுத்துக்கொண்ட சாம்சன் தொடர்ந்து பேட்டிங் பயிற்சிகளை செய்து அருகில் கம்பீரை வைத்துக்கொண்டே சிக்ஸர்களை பறக்க விட்டார். அதனால் 2025 ஆசியக் கோப்பையில் தமக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கம்பீருக்கு அவர் தொடர்ந்து சிக்னல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



