80 லட்சம்.. நன்றி மறவாத பாண்டியா பிரதர்ஸ்.. சொந்த தங்கைகளாக நினச்சு செய்த உதவிகள்.. பற்றி கோச் பேட்டி

Pandya Brothers
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா நல்ல திறமையுடைய வீரர்களாக வலம் வருகிறார்கள். அதில் ஸ்பின் ஆல் ரவுண்டரான க்ருனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அசத்தி இந்தியாவுக்காக விளையாடினார். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இப்போதும் முதன்மை வீரராக வலம் வரும் அவர் அடுத்ததாக இந்தியாவுக்காக 2025 ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளார். அப்படி கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாண்டியா சகோதரர்கள் தங்கள் வளர்ச்சிக்கு காரணமான பயிற்சியாளருக்கு நன்றி மறவாமல் உதவி செய்து வருகிறார்கள். ஆம் இன்று தங்கள் சிறு வயது பயிற்சியாளர் ஜிதேந்திரா சிங்கிற்கு அவர்கள் சத்தமின்றி உதவி செய்து வருகிறார்.

- Advertisement -

குருவுக்கு காணிக்கை:

குறிப்பாக உங்களுடைய தங்கைகள் எங்களின் தங்கைகள் என்று சொல்லி அவருடைய தங்கைகளின் திருமணத்திற்கு பாண்டியா சகோதரர்கள் உதவி செய்துள்ளார்கள். இதுவரை 70 – 80 லட்சம் வரை பாண்டியா சகோதரர்கள் உதவியது பற்றி சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்திரா பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் – க்ருனால் ஆகியோர் 2018இல் என்னுடைய முதல் தங்கையின் திருமணம் சுமூகமாக நடக்கத் தேவையான பண உதவிகளை செய்தனர்”

“அது மட்டுமின்றி அவர்கள் 20 லட்சத்திற்கு கார் வாங்குவதற்கான பணமும் மற்ற பரிசுப் பொருட்களும் கொடுத்தனர். என்னுடைய 2வது தங்கையின் திருமணம் 2024 பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது “உங்களுடைய தங்கை என்னுடைய தங்கை. தங்கையின் திருமண தேதியை மட்டும் சொல்லுங்கள்” என்று ஹர்டிக் கூறினார். பின்னர் அவரிடம் தேதியை தெரிவித்தேன்”

- Advertisement -

நன்றி மறவாத மாணவர்கள்:

“அதற்கு கவலைப்படாதீர்கள் அனைத்து தேவைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் சொன்னார். கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக நான் அவரிடம் ஒரு பிரச்சனையை குறிப்பிடவில்லை. இருப்பிடம் பரோடாவுக்கு வந்த பின் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டறிந்த ஹர்திக் என்னிடம் விசாரித்தார். அப்போது இறுதியாக எனது அம்மாவின் உடல்நிலை சரியில்லாததை சொன்னேன்”

“அதற்கு தயவு செய்து பணம் தருகிறேன், அம்மாவின் உடல் நிலையை குணமடைய செய்யுங்கள் என்று பாண்டியா சொன்னார். இது அவர்களின் தாராள மனப்பான்மையின் முதல் நிகழ்வு மற்றும் எங்கள் ஆழமான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்தது. 2016இல் ஆஸ்திரேலியாவில் அறிமுகமான பின் நாடு திரும்பிய ஹர்திக் 5 – 6 லட்சம் மதிப்பிலான காரை எனக்கு பரிசளித்தார்”

இதையும் படிங்க: அதுக்கு பயந்து யுவ்ராஜ் முதுகில் தோனியும் கோலியும் குத்திட்டாங்க.. நட்புக்கு இடமில்லை.. யோக்ராஜ் அதிரடி விமர்சனம்

“அதை ஏற்றுக்கொள்ளாத போதிலும் பைக்கில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில் அவர்கள் வற்புறுத்தி எனக்கு கொடுத்தனர். 2017, 2019 ஐபிஎல் கோப்பைகளை மும்பை வென்ற பின் அவர்கள் எனக்கு பொருளாதார உதவிகளை செய்தனர். 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்ற பின் க்ருனால் 18 லட்சம் அனுப்பினார். இதுவரை அவர்கள் 70 – 80 லட்சம் வரை உதவி செய்திருப்பார்கள்” என்று நன்றியுடன் கூறினார்.

Advertisement