அதுக்கு பயந்து யுவ்ராஜ் முதுகில் தோனியும் கோலியும் குத்திட்டாங்க.. நட்புக்கு இடமில்லை.. யோக்ராஜ் அதிரடி விமர்சனம்

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் சிறந்த ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார். 2000 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2007 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க உதவிய அவர் தோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

2011 உலகக் கோப்பையில் புற்றுநோயையும் தாண்டி ஆல் ரவுண்டராக அசத்திய யுவ்ராஜ் தொடர்நாயகன் விருது வென்று தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடருக்குப் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் விளையாடினார். ஆனால் முன்பு போல் விளையாட முடியாமல் தடுமாறிய யுவ்ராஜ் 2014 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் தடுமாற்றமாக விளையாடினர்.

- Advertisement -

யுவ்ராஜ் முதுகில்:

அதனால் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்த அவர் 2015 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராத யுவராஜ் உள்ளூரில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் 2016 டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்தத் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் 2017 கட்டாக் ஒருநாள் போட்டியில் தோனியுடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் விராட் கோலி தலைமையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்தத் தொடரிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத யுவ்ராஜ் ஐபிஎல் தொடரிலும் தடுமாற்றமாகவே விளையாடினார். அதனால் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விட்ட அவருக்கு போட்டியாக வந்த இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

குத்திய தோனி, கோலி:

இந்நிலையில் தம்முடைய மகன் யுவ்ராஜ் சிங்கிற்கு கேரியரின் கடைசிக்கட்ட வருடங்களில் கேப்டனாக தோனி மற்றும் விராட் கோலி போதுமான வாய்ப்பு வழங்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். இந்திய அணியில் நட்புக்கு இடமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வெற்றி, பணம் ஆகியவற்றில் யாரும் நண்பர்கள் இல்லை என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: என் வாழ்க்கை மாறுனதே அந்த மேட்சுக்கு அப்புறம் தான்.. இந்திய வீரர் ரிங்கு சிங் – நெகிழ்ச்சி பேட்டி

“அங்கே எப்போதும் முதுகில் குத்துபவர்கள், உங்களை கீழே தள்ள விரும்புவர்கள் தான் இருப்பார்கள். யுவ்ராஜ் சிங் பார்த்து சிலர் பயப்பட்டார்கள். ஏனெனில் அவர் அவர்களுடைய இருக்கையை எடுத்துக்கொள்வார் என்று அவர்கள் பயந்தார்கள். அந்தளவுக்கு யுவ்ராஜ் கடவுளால் உருவாக்கப்பட்ட சிறந்த வீரர். “ஓ, இவர் நம்முடைய இருக்கையை எடுத்துக் கொள்வார் போல” என்று எம்எஸ் தோனி உட்பட அனைவரும் பயந்த வீரர்களில் யுவ்ராஜ் சிறந்தவர்” என்று கூறினார்.

Advertisement