சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடயிருக்கிறது. கடைசியாக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் அதற்கடுத்து கடந்த ஒரு மாதமாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறது.
அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தவிருக்கும் சாதனை :
அதைத்தொடர்ந்து அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இதன் காரணமாக இன்று துபாய் சென்றுள்ள இந்திய அணியானது ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் தங்கி சில நாட்கள் பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 10-ம் தேதியில் நடைபெற இருக்கும் முதலாவது லீக் போட்டியிலேயே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் முதல் இந்திய பந்துவீச்சாளராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்துவதற்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டி20 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் அடுத்த போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார். இவருக்கு அடுத்து இந்த பட்டியலில் 96 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் இரண்டாவது இடத்திலும், ஹார்டிக் பாண்டியா 94 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : எந்த பிரச்சனையும் இல்ல.. சுப்மன் கில் விளையாடுனாலும் நமக்கு நல்லது தான் – இர்பான் பதான் கருத்து
டி20 அணியை பொருத்தவரை முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இருப்பதனால் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றுவார் என்பதனால் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இந்திய பந்துவீச்சாளராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக சாதனையை நிகழ்த்துவார் என்பது உறுதி.



