இது என்ன முட்டாள் தனம்.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி குறித்த வதந்திக்கு – சந்தீப் சர்மா நேரடி கருத்து

Sandeep and Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இருந்தாலும் அந்த ஆண்டோடு கொல்கத்தா அணியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் கழட்டி விடப்பட்டார். அதனை தொடர்ந்து 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று ஆர்.சி.பி அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி குறித்து : சந்தீப் சர்மா பேச்சு

இருந்தாலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு அணிகளை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றதால் அவரை எதிர்கால கேப்டனாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக கடந்த பல நாட்களாகவே சில வதந்திகள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயர் புதிய ஒருநாள் கேப்டனாக மாற இருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

அதேபோன்று சூரியகுமார் யாதவுக்கு பதிலாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா தற்போது ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

சூரியகுமார் யாதவ் எந்த ஒரு ஐபிஎல் அணிக்கும் முழு சீசன் கேப்டனாக இருந்ததில்லை. அதனால் அவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கக் கூடாது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அதேபோன்று கடந்த மூன்று ஆண்டுகளாக ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன்சி செய்யாமல் இருக்கிறார். ஆனால் தற்போது வரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

எனவே இந்திய அணிக்கு கேப்டன்சி செய்வதும், ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்வதும் ஒன்றில்லை என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். ஐபிஎல் என்பது முற்றிலும் வேறு சர்வதேச போட்டிகள் என்பது முற்றிலும் வேறு. சர்வதேச போட்டிகளில் விளையாடுகையில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 15 வீரர்களை ஒன்றாக இணைத்து விளையாடும் போது சரியான கேப்டன் அவசியம்.

இதையும் படிங்க : வெளிய பாக்க தான் பிளாங்க்கா தெரியும்.. ஆனா செம மூளைக்காரர்.. வருணை பாராட்டிய – முன்னாள் இந்திய வீரர்

அந்த வகையில் தான் சூரியகுமார் யாதவ் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார் என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் அவரை கேப்டனாக மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் அது பெரிய முட்டாள் தனம். ஷ்ரேயாஸ் ஐயருக்கு அனுபவமும், திறமையும் கூடும்போது இந்திய அணியின் கேப்டனாக வரலாம் என சந்தீப் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement