18 ரன்ஸ்.. டெய்ல் எண்டர் ரவூப் சாதனை போராட்டம்.. பாகிஸ்தானை சாய்த்த ஆப்கானிஸ்தான் கிண்டலுக்கு பதிலடி

- Advertisement -

ஐக்கிய அரபு, நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. 2025 ஆசியக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியாவுக்குப் பின் 2வது சிறந்த ஆசிய அணி என்று ஒரு செய்தியாளர் ஆப்கானிஸ்தானை வர்ணித்தார்.

2023 உலகக் கோப்பையில் சென்னையில் பாகிஸ்தானை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்று சாதனை படைத்தது. அதனால் ஆப்கானிஸ்தானை அப்படி வர்ணித்ததாக அந்த செய்தியாளர் ட்விட்டரில் தெளிவுப்படுத்தினார். ஆனால் அதைக் கேட்டு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா “நீங்களா 2வது சிறந்த ஆசிய அணி” என்று கலாய்க்கும் வகையில் ரியாக்சன் கொடுத்தது வைரலானது.

- Advertisement -

அந்த நிலையில் துவங்கிய முத்தரப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தான் அசத்தியது. அப்போது 2வது ஆசிய அணிக்கு என்னாயிற்று? என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆப்கானிஸ்தானை சமூக வலைதளங்களில் தாறுமாறாக கிண்டலடித்தனர். அந்த சூழ்நிலையில் செப்டம்பர் இரண்டாம் தேதி சார்ஜாவில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2வது லீக் போட்டி நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் அசத்தல்:

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கி ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 169/5 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக செதிகுல்லா அட்டல் 64 (45), இப்ராஹிம் ஜாட்ரான் 65 (45) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக பஹீம் அஸ்ரப் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு பர்ஹான் 18, சாய்ம் ஆயுப் 0, பஃகார் ஜமான் 25, கேப்டன் சல்மான் ஆகா 20, ஹசன் நவாஸ் 9, முகமத் நவாஸ் 12, முகமத் ஹரிஷ் 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய பாகிஸ்தானுக்கு 10வது இடத்தில் களமிறங்கிய ஹாரிஸ் ரவூப் அதிரடியாக 4 சிக்ஸருடன் 34* (16) ரன்கள் எடுத்துப் போராடினார்.

பதிலடி வெற்றி:

அதையும் தாண்டி 20 ஓவரில் பாகிஸ்தானை 151/9 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் கடந்தப் போட்டியில் தங்களை கிண்டலடித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளைப் பெற்றது. மேலும் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை (+0.325) முந்தி ஆப்கானிஸ்தான் (+1.400) முதல் இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: பணம், பிஸ்னஸை வளர்க்கவே பிசிசிஐ இதை பன்றாங்க.. கில்லை வைத்து போடும் பிளான்.. பற்றி உத்தப்பா பேட்டி

மறுபுறம் வரலாற்றில் முதல் முறையாக 10 அல்லது 11வது களமிறங்கிய டெயில் எண்டர் பேட்ஸ்மேன் பாகிஸ்தானுக்காக அதிகபட்ச ஸ்கோர் அடித்தும் வெற்றி காண முடியவில்லை. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (34*) பதிவு செய்த பாகிஸ்தான் டெயில் எண்டர் என்ற சாதனையை ஹாரிஸ் ரவூப் படைத்துள்ளார். இதற்கு முன் 2017இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வகாப் ரியாஸ் 24 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

Advertisement