இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முறை 2026 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற இருக்கின்றன.
சூரியகுமார் யாதவுக்கு கிடைக்கவுள்ள பெருமை :
இந்த தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் : நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் : ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தயில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்க இருக்கும் சூரியகுமார் யாதவ் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு மூன்றாவது இந்திய கேப்டனாக பெருமை ஒன்றினை அடையவுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சூரியகுமார் யாதவுக்கு கிடைக்கப்போகும் பெருமை யாதெனில் : இதுவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரு முறை மட்டுமே ஆசிய கோப்பை தொடர்நது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்றுள்ளன. அப்படி இருமுறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற போது அந்த அணியின் கேப்டன்களாக முறையே தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க : ஆயுஷ் மாத்ரேவை விட சீக்கிரம் அந்த பையன் இந்தியன் டீமுக்குள்ள வந்துடுவான் – சுரேஷ் ரெய்னா கருத்து
அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற இருக்கும் வேளையில் மூன்றாவது இந்திய கேப்டனாக இந்த இந்திய அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



