சஞ்சு சாம்சன் மட்டுமல்ல ராகுல் டிராவிடும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற அவர்தான் காரணமாம் – வெளியான தகவல்

Samson and Dravid
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 14 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தை பிடித்து வெளியேறியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நல்ல நிலையை நோக்கி முன்னேறியது.

ராகுல் டிராவிட் பதவி விலக காரணம் யார்? :

ஆனால் நடைபெற்று முடிந்த இந்த 2025 தொடரில் மீண்டும் படுமோசமான நிலைமைக்கு சென்றது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி நிர்வாகத்தின் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக மாற்றுவதற்கான முயற்சியில் இருப்பதாகவும், அவருடைய நெருங்கிய உறவினர் நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினராக இருப்பதால் அவரது கேப்டன் பதவி நியமனம் என்பது உறுதி என்றும் பேசப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விலக இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுவதாக கூறப்படும் வேளையில் டிராவிட் அந்த அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

இப்படி இரண்டு பெரிய முடிவுகள் எடுக்கப்பட மிக முக்கிய காரணமே ரியான் பராக் தான் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ரியான் பராக்கை முன்னிலைப்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் பிடிக்கவில்லை. அதேவேளையில் ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் ரியான் பராக் மீது அதிக நாட்டம் காட்டுவதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சேன்ஸ் கிடைக்கலனாலும் இங்கிலாந்தில் நிறைய கத்துக்கிட்டேன்.. அதுவே போதும் – அர்ஷ்தீப் சிங் பேட்டி

அதோடு ரியான் பராக் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படும் வேளையில் டிராவிடை நீக்கிவிட்டு சங்கக்காராவை பயிற்சியாளராக கொண்டு வரவும் ராஜஸ்தான் அணி யோசித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அதிருப்தி அடைந்த டிராவிட் அவர்களாக வெளியேற்றுவதற்கு முன்னதாகவே தானாக முன்வந்து பதவியில் இருந்து விலகியுள்ளார் என்றும் இந்த முடிவுக்கு பின்னால் பராக்கின் ஆதிக்கம் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Advertisement