சஞ்சு சாம்சனால் துவக்க வீரராக மட்டுமின்றி அந்த இடத்திலும் களமிறங்கி அசத்த முடியும் – கோச் அளித்த பேட்டி

Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த வாரம் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்ததில் இருந்து சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவாரா? என்ற கேள்வியே பலரது மத்தியிலும் அதிகளவு பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் அண்மைக்காலமாகவே அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் தற்போது சுப்மன் கில் இந்திய அணிக்குள் வந்துள்ளதால் சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் களமிறங்க தயார் : சிறுவயது கோச் பேட்டி

ஏனெனில் சுப்மன் கில் பெரும்பாலும் துவக்க வீரராகவே விளையாடி பழக்கப்பட்டவர் என்பதனாலும் ஆசிய கோப்பை தொடருக்கான துணை கேப்டன் பதவியும் அவருக்கு கிடைத்துள்ளதால் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா விளையாடுவார் என்றும் கூறப்பட்டுகிறது.

- Advertisement -

ஆனால் கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் கேரளா லீக் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சிறப்பான பேட்டிங் பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் துவக்க வீரராக மட்டுமின்றி மிடில் ஆர்டரிலும் அவரால் அசத்தலாக செயல்பட முடியும் என சஞ்சு சாம்சனின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்திய அணியால் பயன்படுத்த முடியும். ஏனெனில் அவரால் துவக்க வீரராகவும் சரி, கீழ் வரிசையிலும் சரி சிறப்பாக விளையாட முடியும். அதற்கான திறன் அவரிடம் உள்ளது. அவருடைய திறமையை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

- Advertisement -

எந்தவொரு நெருக்கடியாக இருந்தாலும் எந்த நேரத்திலும் அவரால் அற்புதமாக செயல்பட முடியும். எனவே சஞ்சு சாம்சனை கீழ் வரிசையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவரது பயிற்சியாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் எந்த வரிசையிலும் அவர் விளையாட தயார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை துவக்க வீரருக்கான இடத்தில் இருந்து யாராலும் தூக்க முடியாது.. இதுதான் காரணம் – விவரம் இதோ

எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement