தண்ணீரில் நீந்தும் மீன் போல அதை ஈஸியா செய்யும் கில்.. 260, 270 ரன்ஸ் அடிச்சு என்னை மாற வெச்சாரு.. சாய் கிசோர்

Sai Kishore
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில் உருவாக்கப்பட்டு வருகிறார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் சமீப காலங்களில் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட் அவரை பிசிசிஐ புதிய கேப்டனாக அறிவித்தது.

அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த அவர் பல சாதனைகளைப் புரிந்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் ஏற்கனவே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 2025 ஆசியக் கோப்பையிலிருந்து அவர் டி20 அணியின் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

மாற்ற வைத்த கில்:

அதனால் இன்னும் சில வருடங்களில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் இருப்பதை ரசிகர்கள் பார்க்க முடியும் என்றே சொல்லலாம். இந்நிலையில் சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பை தண்ணீரில் நீந்து மீன் போல மிகவும் எளிதாக செய்வதாக சாய் கிசோர் தெரிவித்துள்ளார். சுப்மன் கில் தலைமையில் குஜராத் ஐபிஎல் அணியில் விளையாடும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“சுப்மன் கில் ஒரு அதிசயம். 16 வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நாங்கள் முதல் முறையாக அண்டர்-19 அளவில் விளையாடிய போது பட்டியாலாவில் அவர் 260 ரன்கள் அடித்தார். பின்னர் ரஞ்சிக் கோப்பையில் 270 ரன்கள் அடித்த அவரை கண்டறிய எனக்கு 4 வருடங்கள் தேவைப்பட்டது. அதனால் என்னுடைய பயிற்சியார் ராஜ் குமாரிடம் சென்று, “என்னை ஒரு பையன் அனைத்துப் பக்கங்களிலும் அடிக்கிறான்? என்ன செய்யட்டும்” என்று கேட்டேன்”

- Advertisement -

தண்ணீரில் நீந்தும் மீன் போல:

“சுப்மன் கில்லால் என்னுடைய பாதையை புதிதாக மாற்றுவதற்காக நான் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கதையை அவரிடமும் கூறியுள்ளேன். அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை தண்ணீரில் நீந்தும் மீன் போல எடுத்துக் கொண்டுள்ளார். இங்கே இதற்கு முன் அவர் பஞ்சாப் அணியை கேப்டன்ஷிப் செய்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

இதையும் படிங்க: ஆல்ரெடி முடிவு பண்ணிட்டாங்க.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த பதவியும் கிடைக்க வாய்ப்பே இல்ல.. ஆகாஷ் சோப்ரா

“ஏனெனில் அவர் எப்போதும் இந்திய அணியுடன் இருந்தார். இந்திய அணிக்கு ஒரு தலைவர் தேவை என்ற நிலையில் சுப்மன் வந்துள்ளார். அவர் தன்னை இயற்கையாகவே கேப்டன்ஷிப் பொறுப்புக்கு உட்படுத்திக் கொண்டுள்ளதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வரும் வருடங்களில் அவர் இன்னும் நல்ல கேப்டனாக வளர்வார் என்று நம்பலாம்” எனக் கூறினார்.

Advertisement