என் இதயம் ஆர்சிபி அணிக்காக அந்த வேலையை செய்யத் தயார்.. வேண்டும்போது சொல்லுங்க.. ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் விளையாடி வரும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்தது. குறிப்பாக அனில் கும்ப்ளே, விராட் கோலி ஆகியோர் தலைமையில் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான்கள் விளையாடியும் அந்த அணியால் வெற்றிக் காண முடியவில்லை.

அதனால் கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்த பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் கோப்பையை வென்றது. அதன் காரணமாக விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து ஒரு வழியாக ஐபிஎல் கோப்பையில் முத்தமிட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அத்துடன் கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை களத்திற்கு அழைத்த விராட் கோலி கோப்பையை கையில் கொடுத்து வெற்றியை சேர்ந்து கொண்டாடினார்.

- Advertisement -

பெங்களூருவில் இதயம்:

அந்தளவுக்கு ஆர்சிபி அணியின் வெற்றிகளில் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். குறிப்பாக இப்போதும் ஆர்சிபி அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரராக டீ வில்லியர்ஸ் திகழ்கிறார். அதனால் ஐபிஎல் கோப்பையை தூக்கி கொண்டாடுவதற்கு அவர் முழுமையாகத் தகுதியானவர் என்று வெற்றிக்குப் பின் விராட் கோலி வெளிப்படையாக பாராட்டினார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றாலும் தம்முடைய இதயம் ஆர்சிபி அணியிடம் இருப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். எனவே வருங்காலத்தில் அந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர், ஆலோசகர் போன்ற ஏதேனும் வேலை செய்து வெற்றிகளில் பங்காற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அது போன்ற தேவை இருக்குமெனில் தன்னை அழைக்குமாறும் அவர் ஆர்.சி.பி அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -

டீ வில்லியர்ஸ் அழைப்பு:

இது பற்றி டீ வில்லியர்ஸ் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் வருங்காலங்களில் நான் வித்தியாசமான வேலையில் ஈடுபடக்கூடும். ஆனால் ஒரு தொடர் முழுவதும் தொழில் முறையில் ஈடுபடுவது மிகவும் தந்திரமானது. அது போன்ற நாட்கள் முடிந்து விட்டதாக நான் நம்புகிறேன். இருப்பினும் உங்களால் முடியாது என்று சொல்ல முடியாது என சொல்லப்பட்டுள்ளது”

இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. அந்த மாதிரி பந்துகளுக்கு 12 ரன்ஸ் கொடுத்தா இன்ரெஸ்ட் வரும்.. ஐசிசிக்கு பீட்டர்சன் கோரிக்கை

“என்னுடைய இதயம் ஆர்சிபி அணியுடன் எப்போதும் இருக்கிறது. எனவே ஒருவேளை பெங்களூரு அணி எனக்கு அங்கே ஏதேனும் ஒரு வேலை இருக்கிறது என்று கருதினால், என்னுடைய நேரம் சரியாக இருந்தால், அதை நான் செய்யத் தயார். கண்டிப்பாக நான் ஆர்சிபி அணியில் இருப்பேன்” என்று கூறினார். இதிலிருந்து வருங்காலங்களில் ஆர்சிபி தவிர்த்து வேறு ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக செயல்படப் போவதில்லை என்று டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement