2 மேட்ச்லயும் நாங்க தான் ஜெயிப்போம்.. பாகிஸ்தான் வீரர் திமிர் பேச்சு – வசைபாடும் ரசிகர்கள்

Harris Rauf
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் : ஹாரிஸ் ரவுப்

இந்த தொடரில் பங்கேற்று உள்ள 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதன் பின்னர் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெறும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அணியுடன் மோத வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் இரு முறை இந்தியா போகிஸ்தான் அணிகள் மோதும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் இரண்டு போட்டியிலேயுமே பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான ஒரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்புகையில் : இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என சற்றும் யோசிக்காமல் ஹாரிஸ் ரவுப் கூறியிருந்தார். அவர் இப்படி கூறியது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான தொடரை இழந்து மோசமான நிலையை சந்தித்த பாகிஸ்தான் தொடர்ச்சியாக தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்கள் பலர் பார்மில் இல்லாத வேலையில் அந்த அணி வெற்றி பெறும் என்று ஹாரிஸ் ரவுப் கூறியுள்ள வேளையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெகு சுலபமாக வீழ்த்தும் என்று ரசிகர்களும் அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றார்.

இதையும் படிங்க : அதைப் பற்றி சொன்னா என் கேரியரை முடிச்சுருவாங்க.. ஸ்ரேயாஸ் கம்பேக் கொடுப்பாரு.. தாக்கூர் பேட்டி

தற்போதுள்ள இந்திய அணியில் அனுபவம், இளமை என இரண்டும் கலந்துள்ளதால் நிச்சயம் பாகிஸ்தான் அணியை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இந்திய அணி வீழ்த்தும் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement