45 பந்தில் 100.. ஃபார்முக்கு வர அவங்க காரணம்.. ஆசிய கோப்பை சான்ஸ் கிடைக்காதுன்னு நினச்சேன்.. ரிங்கு பேட்டி

Rinku Singh
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படாதது விமர்சனங்களை எழுப்பியது. அது பற்றி கேட்டதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸை தேர்ந்தெடுப்பது? என்று நீங்களே சொல்லுங்கள் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார். அதற்கு கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக சிறப்பாக விளையாடாத சிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஸை தேர்ந்தெடுக்கலாமே என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அந்த சூழ்நிலையில் உத்தரபிரதேசத்தில் 2025 யூபி டி20 நடைபெற்று வருகிறது. அத்தொடரின் 9வது போட்டியில் 168 ரன்களை துரத்திய மீரட் அணி 38/4 எனத் தடுமாறியது. அப்போது களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதத்தை அடித்து 108* ரன்கள் குவித்து தன்னுடைய அணியை கேப்டனாக வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சதமடிக்க காரணம்:

அதனால் ஆசிய கோப்பையில் தன்னுடைய தேர்வை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ரிங்கு ஃபார்முக்கு வந்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக விளையாடியதால் 2025 ஆசியக் கோப்பையில் தமக்கு இடம் கிடைக்காது என்று நினைத்ததாக ரிங்கு தெரிவித்துள்ளார். இருப்பினும் தேர்வுக்குழு தன்னை நம்பி தேர்ந்தெடுத்ததால் கிடைத்த உத்வேகத்தால் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ரிங்கு பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பை தொடருக்கான பட்டியலில் என்னுடைய பெயர் இருந்ததைப் பார்த்து எனக்கு உத்வேகம் கிடைத்தது. கடந்த வருடம் எனக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் எனக்கு அணியில் இடம் கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் தேர்வாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்தது என்னுடைய தன்னம்பிக்கைக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது”

- Advertisement -

ரிங்கு இஸ் பேக்:

“யூபி டி20 லீக் தொடரில் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் எனது தன்னம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது. அதை அங்கிருந்து நான் எடுத்துக் கொள்வேன். இன்று நீங்கள் பவுலிங் முக்கியமாக இருக்கிறது. ஏனெனில் தேர்வுக்குழுவினர் அணியில் விளையாடுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை செய்வதை விரும்புகின்றனர். அப்போது தான் பேட்டிங்கில் அசத்த முடியாமல் போனால் நீங்கள் பந்து வீச்சில் அசத்த முடியும்”

இதையும் படிங்க: ஸ்டார்கிற்கு தமிழ் தெரியும்.. உலகிலேயே ஆஸிக்கு கோச்சிங் கொடுத்த ஒரே பிளேயர் அஸ்வின்.. டிராவிட் பேட்டி

“2023இல் 5வது இடத்தில் விளையாடிய நான் 7, 8வது இடங்களில் விளையாடிய போது நன்றாக உணரவில்லை. ஆனால் அங்கே தான் அணிக்கான தேவை இருப்பதால் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவுக்காக 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நான் 3 அரை சதங்கள் அடித்துள்ளேன். ஃபினிஷிங் செய்வது மட்டுமின்றி, என்னால் அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்ய முடியும்” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார்.

Advertisement