2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இப்படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
அவங்க 2 பேரையும் இந்திய அணியில் தவிர்க்க முடியாது : ராகுல் சர்மா
அதிலும் குறிப்பாக முன்னாள் வீரர்கள் மத்தியில் இந்திய அணியின் இந்த அணித்தேர்வு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் திறமையான சில வீரர்களுக்கு இந்த தொடரில் இடம் கிடைக்காததும், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு திடீரென மீண்டும் வாய்ப்பு கிடைத்ததும் என சில குறிப்பிட்ட விவரங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் சர்மா கூறுகையில் : இந்திய அணியில் தற்போது திறமையான பல வீரர்கள் உள்ளனர்.
அதனால் தான் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் உலகின் முன்னணி அணியாக திகழ்ந்து வந்தது. இப்படி திறமையான வீரர்கள் பலர் இருக்கும் இந்திய அணியில் இருந்து பிளேயிங் லெவனை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக காரியம். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மீண்டும் வந்திருப்பது சரியான ஒன்றுதான்.
அவரால் மூன்று வகையான போட்டிகளிலும் நிச்சயம் சிறப்பாக ஆட முடியும். அதே வேளையில் இரண்டு வீரர்களை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தும் அவர்களுக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தானுடன் என்ன சாதிக்க போறீங்க.. ரசிகர்கள் மாதிரி நான் அதை செய்ய மாட்டேன்.. திவாரி விமர்சனம்
இருந்தாலும் அவர்களை நீண்ட நாள் இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. நிச்சயம் அவர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டின் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்து கதவை உடைத்து உள்ளே வருவார்கள் என ராகுல் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



