ரோஹித்துக்கு பின் கேப்டனாக கில்லை விட ஸ்ரேயாஸ் தான் தகுதியானாவர்.. காரணம் இதான்.. ராயுடு

Ambati Rayudu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில்லை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழுவினர் அவரை புதிய கேப்டனாக நியமித்தனர். அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த கில் பல சாதனைகளைப் புரிந்து இந்தியாவை தொடரை சமன் செய்ய உதவினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஐசிசி டாப் 10 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் துணை கேப்டனாக இருந்து வருகிறார். எனவே ரோகித் சர்மா விடை பெற்றதும் ஒருநாள் போட்டிகளிலும் புதிய கேப்டனாக பொறுப்பேற்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ரோஹித்துக்கு பின்:

அப்படியே டி20 கிரிக்கெட்டிலும் சூரியகுமாருக்கு அடுத்ததாக கில்லை கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. அதற்காக 2025 ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய கேப்டனாக தகுதியானவர் என்று முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற அவர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதாக ராயுடு பாராட்டியுள்ளார். ரோகித் சர்மா போலவே அமைதியாக செயல்படும் திறமை இருப்பதால் ஸ்ரேயாஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் ராயுடு பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்:

“ரோஹித்துக்குப் பின் அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சரியானவர். அவரிடம் அபரிதமான அமைதி இருக்கிறது. கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர் இளம் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். பஞ்சாப் அணிக்கு இதுவரை யாரும் அந்தளவு வெற்றிகரமான முடிவுகளைக் கொடுத்ததில்லை”

இதையும் படிங்க: சுப்மன் கில்லின் வருகையால் சஞ்சு சாம்சனின் இடத்திற்கு தான் ஆபத்து.. காரணத்தை கூறிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

“எனவே ஸ்ரேயாஸ் அசாதாரணமான கேப்டன். அவர் அடுத்த கேப்டனாக வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே ரோஹித் சர்மாவுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஸ்ரேயாஸை கேப்டனாக்க பிசிசிஐ விரும்புவதாக இன்று புதிய செய்தி வெளியாகியுள்ளது. எப்படி பார்த்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement