2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவும், துவக்க வீரராகவும் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். அவருடன் இணைந்து அபிஷேக் ஷர்மா இந்த தொடரில் துவக்க வீரராக விளையாட காத்திருக்கிறார். இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக யார் இடம் பெறப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது.
துருவ் ஜுரேலை தாண்டி ஜிதேஷ் சர்மா இடம்பிடிக்க என்ன காரணம்? :
அந்த வகையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் வெளியான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக துருவ் ஜுரேலை தாண்டி ஜிதேஷ் ஷர்மா இடம்பிடித்துள்ளார். சமீபகாலமாகவே இந்திய அணியில் அசத்தி வரும் துருவ் ஜுரேலை தாண்டி 31 வயதான ஜிதேஷ் சர்மா இடம்பெற்றது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதோடு துருவ் ஜுரேலை தாண்டி ஜிதேஷ் ஷர்மா இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க காரணம் என்ன? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா ஏன் இடம் பிடித்துள்ளார்? என்ற தகவலை இங்கு காணலாம்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஃபினிஷராக களம் இறங்கிய ஜிதேஷ் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்திருந்த அவர் 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 37 ரன்கள் சராசரியுடன் 261 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அதிலும் குறிப்பாக லக்னோ அணிக்கு எதிராக வெற்றிக்கு சாத்தியமில்லாத ஒரு போட்டியில் 33 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். அவருடைய அதிரடியான பேட்டிங் மற்றும் பினிஷராக களமிறங்கும் இடம் ஆகிய இரண்டையும் வைத்தே டி20 அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் முக்கிய வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ
ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுகமான ஜிதேஷ் சர்மா 2024-ஆம் ஆண்டு வரை 9 டி20 போட்டிகளில் விளையாடி 100 ரன்கள் குவித்திருந்த வேளையில் மீண்டும் அவருக்கு ஓராண்டு கழித்து இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



