நல்லா பவுலிங் போடும்போது தான் அவரை கழட்டி விட்டாங்க.. இந்திய அணியின் நிர்வாகத்தை விளாசிய – பரத் அருண்

Bharat Arun
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியிருந்தது.

நல்லா பந்துவீசிய பவுலரை இந்திய அணி கழட்டி விட்டது : பரத் அருண்

இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை நிச்சயம் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தாண்டி பந்துச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேளையில் சத்தமே இல்லாமல் பிரசித் கிருஷ்ணாவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த தொடரின் 3 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்ட போதும் இந்திய அணி அவரை கழட்டி விட்டதாக இந்திய அணியின் நிர்வாகத்தை முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் நிர்வாகத்தை தாக்கி பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் டெஸ்ட் போட்டியின் போது பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் சில தவறுகளை செய்தார். ஆனால் இரண்டாவது போட்டியின் போது அவர் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தை கண்டுபிடித்து சிறப்பாக வீசியிருந்தார். ஆனால் அதற்கடுத்து இரண்டு போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை. அவருக்கு பதிலாக இந்தியாவில் இருந்து ஒரு புதிய வீரரை கொண்டு வந்து விளையாட வைத்தார்கள்.

இதையும் படிங்க : விராட் கோலி கொஞ்சம் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டாரு.. ஆனாலும் அவர் புகழ் 100 ஆண்டுகள் இருக்கும் – அம்பத்தி ராயுடு கருத்து

அதன்பின்னர் அவரும் வெளியேற்றப்பட கடைசி போட்டியில் மீண்டும் பிரசித் கிருஷ்ணா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை திருத்திக் கொண்டு மீண்டும் சிறப்பாக பந்துவீசும் போது தான் அவரை இந்திய அணி வெளியேற்றியது. இந்த தொடரில் என்னை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா நல்ல முன்னேற்றத்தை கண்டு மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தார் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement