தோனியால் தான் எனக்கும் அந்த மோசமான நிலைமை ஏற்பட்டுச்சு – இர்பான் பதான் குற்றச்சாட்டு

Irfan Pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2012 ஆம் ஆண்டு வரை 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 103 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தோனி தான் என்னோட அந்த நிலைமைக்கு காரணம் : இர்பான் பதான்

இந்திய அணிக்கு கிடைத்த சிறப்பான ஆல்ரவுண்டர்களில் இர்ஃபான் பதானும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அவரே ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய கரியரின் கடைசி கட்டத்தில் தான் சந்தித்த இக்கட்டான நிலைக்கு காரணம் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று தனது குற்றச்சாட்டினை இர்பான் பதான் முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் போது பயிற்சியாளர் என்னிடம் எனது கையில் எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.

அப்போது நான் அவரிடம் உங்களிடம் எதுவும் இல்லையென்றால் என்னுடைய இடத்தை யார் முடிவு செய்வது? என்று கேட்டேன். ஆனால் அவர் என்னிடம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இருப்பினும் அப்போதே எனக்கு தெரியும் அணியின் பிளேயிங் லெவனில் யாரை விளையாட வைக்க வேண்டும்? என்பது கேப்டனின் முடிவுதான்.

- Advertisement -

எனவே என்னை தோனி தான் பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடிவு செய்தார். தோனி எடுத்த அந்த முடிவு சரியா? தவறா? என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அணியின் கேப்டன் தான் வெற்றிக்கான சரியான வழியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் தோனி முடிவெடுத்து இருந்தாலும் அது எனக்கு மோசமான உணர்வை தந்ததாக இர்பான் பதான் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய தொடர் மாதிரி பாத்ததில்ல.. ஆனா இங்கிலாந்தின் அந்த ஸ்டைல் ஆஸியில் வேலையாகாது.. ஸ்மித் பேட்டி

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தோனி எடுத்த முடிவால் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஓய்வு முடிவை எடுக்க நினைத்ததாக கூறியிருந்த வேளையில் தற்போது இர்பான் பதானும் அதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement