அப்படின்னா ப்ரேவிஸை சிஎஸ்கே குறுக்கு வழியில் வாங்குச்சுன்னு அஸ்வின் சொல்றாரா? ஆகாஷ் சோப்ரா சந்தேகம்

Aakash Chopra
- Advertisement -

தென்னாபிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் பிரேவிஸ் 2022 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த சாதனை படைத்தார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணி அவரை 3 கோடிக்கு வாங்கியது. அந்த அணியில் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய காரணத்தால் கழற்றி விடப்பட்ட ப்ரேவிஸை கடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக 2.2 கோடிக்கு வாங்கப்பட்ட குர்ஜப்நீத் சிங் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக சிஎஸ்கே 75 லட்சம் என்ற அடிப்படைத் தொகைக்கு பிரேவிஸை வாங்கியது. அந்த அணியில் அபாரமாக செயல்பட்ட ப்ரேவிஸ் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

அஸ்வின் கருத்து:

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ப்ரேவிஸ் 125* (56) ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அப்போது சிஎஸ்கே அணி ப்ரேவிஸை 2.20 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வாங்கியதாக என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். கடந்த ஏலத்தில் நிறைய அணிகள் ப்ரேவிஸ்க்கு எக்ஸ்ட்ரா தொகை கொடுக்க விரும்பாததாலேயே வாங்காமல் விட்டதாக அஸ்வின் கூறினார்.

ஆனால் சிஎஸ்கே அதிகாரப்பூர்வமற்ற வழியில் அதிக சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதாலேயே ப்ரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அஸ்வின் கூறினார். மொத்தத்தில் சிஎஸ்கே அணி வெளியுலகத்திற்கு தெரியாமல் 2.20 கோடிகளுக்கு மேல் பணத்தை கொடுத்து ப்ரேவிஸை குறுக்கு வழியில் வாங்கியதாக அஸ்வின் தெரிவித்தார். இந்நிலையில் அஸ்வினுடைய அந்த கருத்து குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

குறுக்கு வழியில் வாங்கப்பட்டாரா:

“ப்ரேவிஸ் முதல் போட்டியில் விளையாடவில்லை. அதற்கடுத்தப் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் பௌண்டரி எல்லையில் அற்புதமான கேட்ச் பிடித்தார். அவர் சென்னைக்கு விளையாடுவதற்காக அதிக பணம் கேட்டதாக அஸ்வின் சொன்னார். அதிகாரப்பூர்வமாக பெற்றிருக்க வேண்டியதை விட ப்ரேவிஸ் அதிக பணம் பெற வழியிருக்கிறதா? அப்படியானால் பர்ஸ் விதிமுறைகளை உடைக்க ஓட்டை இருக்கிறதா? அதைத்தான் அஸ்வின் முன்னிலைப்படுத்தியுள்ளாரா?”

இதையும் படிங்க: 2009இல் இலங்கையில் அசத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தும்.. தோனி எங்களை பிரிச்சாரு.. பதான் பேட்டி

“உங்கள் மொத்த சம்பளத்தை விகித அடிப்படையில் பெறுவீர்கள். அது உங்கள் அடிப்படை விலையை விட குறைவாக இருக்கக்கூடாது. விதிமுறைப்படி ப்ரேவிஸ் ஒன்று 75 லட்சத்துக்கு குறைவாக அல்லது குர்ஜப்நீத்துக்கு வழங்கப்பட்ட 2.20 கோடிகளுக்கு மேல் சம்பளமாக பெற்றிருக்க முடியாது. ஆனால் ப்ரேவிஸ் கேட்ட எக்ஸ்ட்ரா சம்பளத்தைக் கொடுத்த சிஎஸ்கே சம்மதித்ததாக அஸ்வின் சொல்கிறார். ஒருவேளை அடுத்த வருடம் தக்க வைப்பதற்காக அஸ்வின் சொல்வது போல் ப்ரேவிஸ் கேட்டத் தொகையை சிஎஸ்கே மறைமுகமாக கொடுத்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement