இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இங்கே ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஒரு விதமான ஃபார்மட்டில் மட்டுமே அசத்துப்பவர்களாக உள்ளனர். ஆனால் விராட் கோலி மட்டுமே டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கிய ஒரே பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
27000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 82 சதங்கள் பதிவு செய்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அது போக 2014இல் தோனி விடைபெற்ற பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக ஜொலிக்க வைத்தார். அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.
அந்த 5 வருடங்கள்:
மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை குவித்த விராட் கோலி வரலாற்றின் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்தார். இந்நிலையில் தோனிக்குப்பின் இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்க விராட் கோலி சரியானவர் என்பதை பயிற்சியாளராக தாம் கண்டறிந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தம்முடைய உணர்வுகளை நிஜமாக்கிய விராட் கோலி 2016 – 2021 வரையிலான 5 வருடங்களில் உலக கிரிக்கெட்டை பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் டாமினேட் செய்ததாக சாஸ்திரி கூறியுள்ளார். விராட் கோலியுடன் இணைந்து வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்பட்ட அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இந்திய அணியை தலைமை தாங்க சரியானவர் என்று நான் கண்டறிந்த ஒரு மனிதர்”
சாஸ்திரி பெருமிதம்:
“அவர் இந்திய அணியை தலைமைத் தாங்க வேண்டுமென நான் விரும்பினேன். தோனி கேப்டன்ஷிப்பை பொறுப்பை நிறைவு செய்ததும் நான் பயிற்சியளர் பொறுப்பேற்றதும் விராட் கோலி அற்புதமான வேலையை செய்தார். முதலில் ஒரு பேட்ஸ்மேனாக அவரிடம் எதிரணிகளை டாமினேட் செய்து எதிரணிகள் முகத்தில் விளையாடும் திறன் இருந்தது”
இதையும் படிங்க: இங்கிலாந்தில் பாத்திங்கல்ல.. அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ரைசிங் ஸ்டார்.. ரவி சாஸ்திரி பாராட்டு
“கடினமான நியாயமாக விளையாடிய அவர் வெற்றிகளைப் பெற்று கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினார். விராட் கோலி தனது உச்சத்தில் இருந்த போது நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்வேன். ஏனெனில் அந்த 5 வருடங்கள் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் விளையாடிய சில இன்னிங்ஸ்கள் நம்ப முடியாததாக இருந்தது” என்று கூறினார்.



