2011 மாதிரி 2025 உலகக் கோப்பையை வெல்ல இதை செய்ங்க.. இந்திய மகளிரணிக்கு.. யுவ்ராஜ் சிங் அட்வைஸ்

Yuvraj Singh
- Advertisement -

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் முப்பதாம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் அணிகள் விளையாடுகின்றன. வரலாற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மட்டுமே மகளிர் உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்திய அணி ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை.

எனவே இம்முறை இந்திய அணிக்கு சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வெல்வதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் 2011 உலகக் கோப்பையை இந்தியா சொந்த மண்ணில் தோனி தலைமையில் உள்ள முக்கிய பங்காற்றிய யுவ்ராஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- Advertisement -

யுவ்ராஜ் அட்வைஸ்:

மேலும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கோப்பையை அறிமுகப்படுத்திய யுவ்ராஜ் சிங் 2011 போல இந்திய மகளிரணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சில ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக அழுத்தமான சமயங்களில் தன்னம்பிக்கையுடன் அனுபவத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுமாறு அவர் ஆலோசனைக் கொடுத்தார்.

இது பற்றி யுவராஜ் பேசியது பின்வருமாறு. “இது வரலாறு படைப்பதற்கான சிறந்த வாய்ப்பு என்று நான் கருதுகிறேன். அதற்காக நீங்கள் கோப்பையை வெல்லப் போகிறீர்கள் என்று ஆரம்பத்திலிருந்தே நினைக்கக் கூடாது. நீங்கள் அனைத்து புதிரையும் அனுபவிக்க வேண்டும். செயலில் கவனம் செலுத்தினால் முடிவுகள் தாமாக வரும். நம்முடைய மகளிரணி சில இறுதிப்போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

“நீங்கள் தற்சமயத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பது முக்கியம். அதிகமாக சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருங்கள். பொழுதுபோக்குக்காக வரும் ரசிகர்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதை அல்லது விக்கெட் எடுப்பதைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் நீங்கள் உலகக்கோப்பை வெல்ல வேண்டுமெனில் அதற்குத் தகுந்த சூழ்நிலைகளில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் அழுத்தத்தை சந்திக்கக்கூடிய சமயம் வரும்”

இதையும் படிங்க: கவாஸ்கர், சச்சின் வழியில் முக்கிய முடிவை எடுத்த சர்பராஸ் கான்.. டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க – புதிய திட்டம்

“விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்காத தருணங்கள் வரும். அப்போது தான் உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் அனுபவம் உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு என்னால் முடியும் என்று நம்ப வேண்டும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் களத்திற்கு செல்லும் போது முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement