இதுக்கு பிசிசிஐ எப்படி சம்மதிச்சாங்க? கபில் தேவ், கவாஸ்கர் மாதிரி பும்ரா செஞ்சுருக்கனும்.. சந்தீப் பாட்டில்

Sandeep Patil
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை மிகுந்த போராட்டத்திற்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சமன் செய்தது. அந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்தது.

தனித்துவமான பவுலிங் ஆக்சனைக் கொண்டுள்ள அவர் காயத்தைத் தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டது. அதன் படி ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி காணவில்லை. மறுபுறம் முகமது சிராஜ் முழுமையாக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

கபில் தேவ், கவாஸ்கர்:

அதன் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ராவை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் காயமடையாமல் இருக்கும் பட்சத்தில் முழுமையாக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வாளர் சந்தீப் பாட்டில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது. “முதலில் இவை அனைத்துக்கும் பிசிசிஐ எப்படி சம்மதித்தார்கள்? என்று நான் ஆச்சரியப்படுகிறேன்”

“இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை விட உடற்பயிற்சியாளர் முக்கியமானவரா? தேர்வாளர்களின் வேலை என்ன? அவர்கள் அணியை தேர்ந்தெடுக்கும் போது உடற்பயிற்சியாளர்களை உட்கார வைத்து பேசுகிறார்களா? நீங்கள் நாட்டுக்காக தேர்ந்தெடுக்கும் போது, தேசத்துக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்”

- Advertisement -

முழுமையாக விளையாடனும்:

“நீங்கள் நாட்டின் போராளி. சுனில் கவாஸ்கர் போட்டியின் 5 நாட்களும் பேட்டிங் செய்துள்ளதை நான் பார்த்துள்ளேன். கபில் தேவ் டெஸ்ட் போட்டிகளின் பெரும்பாலான நாட்களில் பவுலிங் செய்துள்ளதை பார்த்துள்ளேன். அது போக அவர் எங்களுக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்வார். அவர்கள் எப்போதும் இடைவெளி கேட்டதில்லை, புகார் செய்ததில்லை. அதையும் தாண்டி அவர்கள் 16+ வருடங்கள் விளையாடினார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடப்போவது எப்போது? – உறுதியான தேதிகள்

“1981இல் ஆஸ்திரேலியாவில் எனது தலையில் காயத்தை சந்தித்த போது நான் அடுத்தப் போட்டியை தவற விடவில்லை” என்று கூறினார். இதற்கிடையே நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் பணிச்சுமை என்ற பெயரை தங்களுடைய அகராதியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுனில் காவாஸ்கரும் விமர்சித்திருந்தார். இருப்பினும் தனித்துவமான பவுலிங் ஆக்சன் கொண்டிருப்பதால் ஜஸ்ப்ரித் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாமல் தவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement