இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று கணித்த பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களின் முகத்தில் கரியை பூசிய இந்தியா சுப்மன் கில் தலைமையில் புதிய சகாப்தத்தை துவங்கியுள்ளது.
மேலும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து அணியுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது. அந்த நிலையில் இந்தத் தொடரில் சிறந்து விளங்கிய 11 வீரர்களைக் கொண்ட தனது கனவு பிளேயிங் லெவனை முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் தேர்ந்தெடுத்தார். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் துவக்க வீரர்களாக அவர் இந்தியாவின் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுலை தேர்ந்தெடுத்தார்.
ப்ராட் லெவன்:
3, 4வது இடங்களில் இங்கிலாந்தின் ஓலி போப், ஜோ ரூட் ஆகியோரை தேர்ந்தெடுத்த ப்ராட் 5வது இடத்தில் ஹாரி ப்ரூக்கை தேர்ந்தெடுத்துள்ளார். அதே சமயம் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்த அவர் லோயர் மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்தார். வேகப்பந்து வீச்சுத் துறையில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார்.
அவருடன் இந்தியாவின் முஹமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரையும் அவர் தேர்ந்தெடுத்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 754 ரன்கள் அடித்து அதிக ரன்களை குவித்த சுப்மன் கில் இல்லாமல் இத்தொடருக்கான பிளேயிங் லெவனை யாராலும் தேர்ந்தெடுக்க முடியாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதே போல ரவீந்திர ஜடேஜா 6வது இடத்தில் களமிறங்கி 500க்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்தார்.
கில், ஜடேஜாவை விட சிறந்தவர்கள்:
எனவே ஜடேஜா இல்லாமல் லோயர் மிடில் ஆர்டர் இருக்க முடியாது என்றும் இந்திய ரசிகர்கள் தெரிவித்தனர். அதற்கு ஒட்டுமொத்த வரலாற்றில் கில், ஜடேஜாவை விட ரூட், ஸ்டோக்ஸ் தகுதியான தரமான வீரர்கள் என்பதாலேயே தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்டுவர்ட் ப்ராட் இந்திய ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: கவலைப்படாதீங்க அபிமன்யு.. வாய்ப்பு மட்டுமல்ல இந்திய அணியில் இதுவும் உங்களுக்கு கிடைக்கும் – கம்பீர் வாக்குறுதி
“கில் இருப்பதற்கு தகுதியானவர். இருப்பினும் ரூட் அடுத்தடுத்த 3 சதங்களுடன் ஆல் டைம் ரன்கள் படித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றுள்ளார். எனவே தற்சமயத்தில் அவரை விட 4வது இடத்தில் விளையாட ரூட் சிறந்தவராக இருக்கிறார். ஜடேஜாவை விட ஸ்டோக்ஸ் சிறந்தவர், குறிப்பாக பந்து வீச்சில்” என்று பதிவிட்டுள்ளார்.



