அந்த இந்திய வீரரை ரசித்தேன்.. என் வாழ்நாளில் இதான் நான் பார்த்த பட்டாசான பெஸ்ட் சீரிஸ்.. மெக்கல்லம் பாராட்டு

Brendon Mccullam
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடியது. அத்தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மிகவும் போராடி 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதன் காரணமாக நிச்சயமாக இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பந்து வீசிய இந்தியா மேற்கொண்டு 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தது. அதன் வாயிலாக 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

- Advertisement -

பட்டாசான தொடர்:

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10க்கும் குறைவான ரன்னுக்குள் வென்று இந்தியா சரித்திர சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ஹாரி ப்ரூக் கேட்ச்சை தவற விட்ட அவர் கடைசி நாளில் 3 விக்கெட்டுகளை எடுத்து சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் தம்முடைய வாழ்நாளில் இதுவே தாம் நேரடியாக பார்த்த 5 போட்டிகள் கொண்ட பட்டாசான டெஸ்ட் தொடர் என்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளார். குறிப்பாக தங்களுக்கு தோல்வியைக் கொடுத்த இந்திய வீரர் முகமது சிராஜை ரசித்து பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மெக்கல்லம் பாராட்டு:

“இதுவே நான் பார்த்து அங்கமாக இருந்த சிறந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். 6 வாரங்கள் விளையாடியும் வெற்றி ஊசலாடியது. அதில் எல்லாம் இருப்பதாக உணர்ந்தேன். சில சமயங்களில் விரோதம், சில நேரங்களில் தோழமை, சில சமயங்களில் சிறந்த கிரிக்கெட் இருந்தது. சில நேரங்களில் இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக எங்களுடைய சுமாரான கிரிக்கெட்டும் இருந்தது”

இதையும் படிங்க: 3 – 1ன்னு பவுண்டரி கவுன்ட்ல தோத்தீங்க.. கலாய்த்த மைக்கேல் வாகன் முகத்தில் கரியை பூசிய இந்தியா.. ஜாபர் பதிலடி

“இது நான் ஒரு அங்கமாக இருந்த பட்டாசான டெஸ்ட் தொடராகும். சிராஜ் கடைசி விக்கெட்டை எடுத்த போது, நான் ஏமாற்றத்தைச் சந்தித்த அளவுக்கு நிகராக அவரை ரசித்தேன். ஒரு கிரிக்கெட்டராக என்ன செய்ய முடியும் என்பதை காண்பித்த அவருடைய சண்டை ரசனைக்குரியது. இது 2 – 2 என்ற கணக்கில் நியாயமாக பிரதிபலிக்க வேண்டிய தொடராகும்” என்று கூறினார்.

Advertisement