வெறும் 35 ரன்ஸ்.. இங்கிலாந்திடம் தற்காலிகமாக காப்பாற்றிய மழை.. இந்தியா அசாத்தியத்தை நிகழ்த்துமா?

IND vs ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் 374 ரன்களை வெற்றி இலக்காக துரத்தும் இங்கிலாந்துக்கு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் ஓலி போப் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் ஆரம்ப கட்டத்திலேயே கொடுத்த கேட்சை பிடித்த சிராஜ் சிக்ஸராக மாற்றி விட்டார். அதைப் பயன்படுத்திய அவர் இந்தியாவை அடித்து நொறுக்கி டி20 போல விளையாடி இங்கிலாந்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

குறுக்கே மழை:

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ப்ரூக் சதத்தை அடித்து 111 (98) ரன்கள் குவித்து அவுட்டானார். அதே போல மறுபுறம் இந்தியாவுக்கு சவாலாக மாறிய ஜோ ரூட் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 105 ரன்கள் குவித்தார். அவர்களுடைய ஆட்டத்தால் இந்தியாவின் தோல்வி உறுதியானதாக இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அடுத்து வந்த ஜேக்கப் பேத்தல் 5 ரன்னில் அவுட்டான போது மழை வந்ததால் நான்காவது நாள் ஆட்டம் முடித்துக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 339/6 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு களத்தில் ஜேமி 2*, ஓவர்டன் 0* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் கிறிஸ் ஓக்ஸ் வந்தால் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் இன்னும் கைவசம் இருக்கிறது.

- Advertisement -

இந்தியா மேஜிக் நிகழ்த்துமா:

ஆனால் அந்த அணிக்கு வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதன் காரணமாக இங்கிலாந்து அணியே இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது. மறுபுறம் மழை வந்ததால் இந்திய அணி தற்காலிகமாக தோல்வியிலிருந்து தப்பித்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: உங்களால் மட்டும் எப்படி தொடர்ந்து விளையாட முடியுது.. தினேஷ் கார்த்திக்கின் கேள்விக்கு – முகமது சிராஜ் பதில்

நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 35 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு மாயாஜாலத்தை நிகழ்த்த வேண்டும் என்றே சொல்லலாம். அந்த அசாத்தியமான வெற்றியை இந்தியா பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement