இந்தியாவின் 5 வருட உலக சாதனையை சமன் செய்த ஆஸி.. 8 – 0 என வெ.இ வரலாறு காணாத தோல்வி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் வென்றது. அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் முதல் 4 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அந்த நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் ஜூலை 29ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாற்றமாக பேட்டிங் செய்து 19.4 ஓவரில் ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம்:

அதிகபட்சமாக ரூதர்போர்ட் 35, சிம்ரோன் ஹெட்மயர் 52 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக பென் ட்வார்சுய்ஸ் 3, நாதன் எலிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கும் கேப்டன் மிட்சேல் மார்ஷ் 14, கிளன் மேக்ஸ்வெல் 0, ஜோஸ் இங்லிஷ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் கேமரூன் கிரீன் 32 (18), டிம் டேவிட் 30 (12), மிட்செல் ஓவன் 37 (17) ரன்களை அதிரடியாக அடித்து ஆஸ்திரேலியாவில் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்கள். கடைசியில் ஆரோன் ஹார்டி 28* (25) ரன்கள் எடுத்த உதவியுடன் 17 ஓவரில் ஆஸ்திரேலியா 173/7 ரன்களை எடுத்தது. அதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 5 – 0 (5) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் செய்து வென்றுள்ளது.

- Advertisement -

ஆஸி உலக சாதனை:

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5 – 0 என்ற கணக்கில் வென்ற அணி என்ற இந்தியாவின் உலக சாதனையை ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2020ஆம் ஆண்டு நியூசிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் 2 சூப்பர் ஓவர் உட்பட 5 – 0 (5) என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்ததை மறக்க முடியாது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2, அல்சரி ஜோசப் 2, அகில் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை

இதையும் படிங்க: விராட், ரோஹித்தை இந்தியா மிஸ் பண்ணாலும்.. இங்கிலாந்தில் பங்களிப்பை மிஸ் பண்ணல.. மஞ்ரேக்கர் ஓப்பன்டாக்

மேலும் வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5 – 0 என்ற கணக்கில் முதல் முறையாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் இந்த சுற்றுப்பயணத்தில் விளையாடிய 8 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் 8 – 0 என வெஸ்ட் இண்டீஸ் தோற்றுள்ளது. அப்படி சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட காண முடியாததால் அந்த அணி ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

Advertisement