விராட், ரோஹித்தை இந்தியா மிஸ் பண்ணாலும்.. இங்கிலாந்தில் பங்களிப்பை மிஸ் பண்ணல.. மஞ்ரேக்கர் ஓப்பன்டாக்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வருகிறது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து மண்ணில் தலைமையிலான சுப்மன் கில் இளம் இந்திய அணி தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே 5 சதங்களை அடித்த இளம் இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.

அடுத்தப் போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா வெளிநாட்டு மண்ணில் தங்களுடைய பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. குறிப்பாக கேப்டன் கில் மட்டும் 430 ரன்கள் அடித்து பல சாதனைகளைப் புரிந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 3வது போட்டியிலும் சிறப்பாக போராடிய இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

ரோஹித், விராட் கோலி:

4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா டிரா செய்து அசத்தியுள்ளது. அந்த வகையில் விராட், ரோஹித் இல்லாமல் இளம் இந்திய அணி பேட்டிங்கில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் விளையாடியும் இந்தியா பேட்டிங் துறையில் இதை விட மோசமாக விளையாடி தோல்வியையும் சந்தித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி விராட், ரோகித்தை மிஸ் செய்தாலும் அவர்களுடைய பங்களிப்பை மிஸ் செய்யவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே அவர்கள் பேட்டிங்கில் பங்காற்றவில்லை என்று மஞ்ரேக்கர் வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பங்காற்றினால் தானே மிஸ் செய்ய:

“ஜோ ரூட் போல இந்திய அணியின் சீனியர் வீரர்களைப் பற்றி நீங்கள் பேசினால் அது வித்தியாசமானது. சமீபத்தில் ஓய்வு பெற்ற அவர்கள் இல்லாமல் இந்தியா தங்களைப் பற்றி ஒரு பெரிய கணக்கை வைத்துள்ளது. சுப்மன் கில்லை பார்க்கும் போது அவர் ஜாம்பவான்களில் ஒருவராக மேலே செல்ல வாய்ப்புள்ளது அதற்கு எதிராக நான் பந்தயம் கட்ட மாட்டேன்”

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் துருவ் ஜுரேல் செய்த மாபெரும் உதவியை பாராட்டிய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

“கடந்த 2 தொடர்களாக ரோஹித் சர்மா வெறும் 10 என்ற பேட்டிங் சராசரியில் விளையாடினார். விராட் கோலி கடந்த 5 வருடங்களாக 30 என்ற சராசரியைக் கொண்டிருந்தார். ஆம் அவர்களது இடத்தை நிரப்புவது எளிது கிடையாது. ஆனால் அவர்கள் ஓய்வு இந்தியாவுக்கு மிக மிகப்பெரிய இழப்பு கிடையாது. அது 2 சீனியர் வீரர்களின் இழப்பு. ஆனால் பங்களிப்பின் இழப்பு கிடையாது. ஏனெனில் அவர்களிடமிருந்து பெரிய பங்களிப்பு எதுவுமில்லை” என்று கூறினார்.

Advertisement