சத்தமே இல்லாமல் துருவ் ஜுரேல் செய்த மாபெரும் உதவியை பாராட்டிய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY and Jurel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது முதல் நாளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று கால் பகுதியில் காயமடைந்தார். அந்த பந்து பட்டதும் வலது காலில் பெரியளவு வீக்கம் ஏற்பட்ட வேளையில் ரிஷப் பண்ட் நிற்க முடியாமல் வலியால் துடித்தார். அதன்பிறகு மைதானத்திற்குள் வந்த மருத்துவக்குழு அவருக்கு முதலுதவியை வழங்கினாலும் அவரது வலி குறையவில்லை.

துருவ் ஜுரேலை பாராட்டிய சூரியகுமார் யாதவ் :

மேலும் விரலில் ஏற்பட்ட வீக்கத்திலிருந்து ரத்தமும் கசித்தது. பின்னர் நடக்க முடியாத அவர் ஆம்புலன்ஸின் உதவியின் மூலம் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் இந்த போட்டியின் பாதியிலேயே ரிஷப் பண்ட் விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் உடைந்த பாதத்துடன் இரண்டாம் நாள் களத்திற்குள் வந்து இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து அரைசதமும் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு உதவி இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது. அதேவேளையில் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த கையோடு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அதனால் அடுத்த ஐந்தாவது போட்டியில் துருவ் ஜுரேல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ரிஷப் பண்ட் இந்த காயத்திலிருந்து குணமடைய ஆறு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் அவர் தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறியதும் அவருக்கு பதிலாக உடனடியாக மாற்று வீராக களத்திற்குள் வந்து விக்கெட் கீப்பிங் செய்த துருவ் ஜுரேலை தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : துருவ் ஜுரேல் செய்த இந்த விடயம் எளிதானது கிடையாது. ஒரு டீம் மேன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் துருவ் ஜுரேல் எடுத்து காண்பித்துள்ளார். ஏனெனில் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் சக வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட காயத்தால் உடனடியாக வந்து இந்திய அணிக்காக தனது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : பிளேயிங் லெவனில் இடம்பெறாமலே 4 ஆவது போட்டியில் உலக சாதனை நிகழ்த்திய துருவ் ஜுரேல் – என்ன தெரியுமா?

சத்தமே இல்லாமல் துருவ் ஜுரேல் இந்திய அணிக்காக அளித்து வரும் இந்த பங்களிப்பு விலைமதிப்பற்றது என சூரியகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். இந்த தொடரில் இப்படி ஜுரம் மாற்றுவீரராக கீப்பிங் செய்வது முதல்முறை கிடையாது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளின் போதும் ரிஷப் பண்ட் சிறிய அளவில் காயத்தை சந்திக்கும் போதும் சரி, தசைப்பிடிப்பால் அவதிப்படும்போதும் சரி உடனடியாக மாற்று வீரராக வந்து களத்தில் கீப்பிராக ஜுரேல் செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement