669 ரன்ஸ்.. 1983 இம்ரான் கானுக்கு பின் ஸ்டோக்ஸ் சரித்திர சாதனை.. 2014க்குப்பின் இந்தியா மோசமான சாதனை

IND vs ENG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 587 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பவுலிங் செய்த இந்தியாவை பஸ்பால் ஸ்டைலில் அடித்து நொறுக்கியது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பென் டக்கெட் 94, ஜாக் கிராவ்லி 84 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் சாதனை:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஓலி போப் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 71 ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜோ ரூட் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து பல சாதனைகளை புரிந்தார். ஹாரி ப்ரூக் 3, ஜேமி ஸ்மித் 9 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர்களுக்கும் சேர்த்து அபாரமாக விளையாடினார்.

சொந்த மண்ணில் நீண்ட வருடங்கள் கழித்து சிறப்பாக விளையாடிய அவர் சதத்தை அடித்து 141 ரன்களை குவித்து இங்கிலாந்து 600 ரன்கள் தாண்ட உதவினார். இறுதியில் பிரைடன் கார்ஸ் 47, லியாம் டாசன் 26 ரன்கள் எடுத்த உதவியுடன் இங்கிலாந்து 669 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

- Advertisement -

இந்தியா மெகா சொதப்பல்:

இந்தப் போட்டியில் பந்து வீச்சில் 5 விக்கெட் எடுத்த பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 வருடங்கள் கழித்து ஒரே போட்டியில் சதத்தையும் 5 விக்கெட்டுகளையும் எடுத்த கேப்டன் என்ற சரித்திர சாதனையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன் கடைசியாக 1983 பைசாலாபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் அந்த சாதனையை படைத்திருந்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் கரியரில் முதன்முறையாக சறுக்கலை சந்தித்த பும்ரா.. மோசமான சாதனை – விவரம் இதோ

மறுபுறம் மோசமாக பவுலிங் செய்த இந்தியா 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் 600+ ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 600+ ரன்கள் கொடுத்திருந்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement