சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ரசல்.. 2 டி20 உ.கோ வின்னர் முடிவால் 2026க்கு முன் வெ.இ அணிக்கு இடி

Andrew Russell
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தினார். அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டிக்கு பின் வாய்ப்பு பெறாத அவர் 2012, 2016 டி20 உலகக் கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.

அதன் பின் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் கவனம் செலுத்திய அவரை வெஸ்ட் இண்டீஸ் வாரியம் கழற்றி விட்டது. அதே போல குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவதால் அவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆர்வத்தைக் காட்டவில்லை. இருப்பினும் சமீப காலங்களில் ஆர்வத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வந்த ரசல் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

ஓய்வை அறிவித்த ரசல்:

விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடிய கையோடு ஓய்வு பெற உள்ளதாக ரசல் அறிவித்துள்ளார். குறிப்பாக தம்முடைய சொந்த ஊரான ஜமைக்காவில் அவர் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி ஓய்வு பெற உள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியது என்னுடைய வாழ்வில் ஒரு பெருமையான சாதனை. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தையாக இருந்த போது இந்த நிலையை எட்டுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் விளையாடத் துவங்கும் போது உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவீர்கள். இந்த வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக மாறுவதற்கு என்னைத் தூண்டியது”

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு இடி:

“வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக என்னுடைய சொந்த மண்ணில் குடும்பம், நண்பர்கள் முன்னிலையில் விளையாட விரும்புகிறேன். கடைசி வாய்ப்பில் அவர்களுக்கு முன்னிலையில் என்னுடைய திறமையைக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய சர்வதேச கேரியரை உச்சமாக முடித்து கரீபியன் கிரிக்கெட்டுக்கு விளையாட வரும் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக திகழ விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சுப்மன் கில் இல்லை.. இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான்.. 33 வயது இந்திய வீரரை பாராட்டிய – உவைஸ் ஷா

37 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ள ரசல் தொடர்ந்து ஐபிஎல் போன்ற டி20 தொடரில் விளையாட உள்ளார். ஆனால் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் நிக்கோலஸ் பூரானுக்கு அடுத்ததாக இவரும் ஓய்வு பெற்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் பெரிய இடியாகப் பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 141 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 2000+ ரன்களும் 132 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement