இங்கிலாந்து மட்டும் இளிச்சவாயா? இந்தியாவுக்கும் தண்டனை கொடுங்க.. ஐசிசியை சாடிய மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனால் 2வது போட்டியில் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

இருப்பினும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை போராடி இங்கிலாந்து தோற்கடித்தது. அதனால் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து மீண்டும் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 193 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து இளிச்சவாயா:

அதனால் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் எடுத்தும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அந்த வெற்றியால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இந்த சூழ்நிலையில் 3வது போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத விதிமுறையை இங்கிலாந்து மீறியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அதனால் இங்கிலாந்து அணிக்கு அந்தப் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10% அபராதத்தை ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது. மேலும் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன் காரணமாக இங்கிலாந்து 61.11% புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

மைக்கேல் வாகன் சாடல்:

இந்நிலையில் அந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் சென்றதற்கு 2 அணிகளுமே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே 2 அணிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்து இளிச்சவாய் என்பது போல் தங்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் ஐசிசியை சாடியுள்ளார்.

இதையும் படிங்க: அது மட்டும் கிடைச்சுருந்தா இந்தியா இந்நேரம் 3 – 0ன்னு ஜெய்ச்சுருக்கும்.. 2 திருப்பு முனை பற்றி ரவி சாஸ்திரி

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கே நேர்மையாக இருங்கள். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுமே நேரத்திற்குள் பந்து வீசுவதில் மிகவும் மோசமாக செயல்பட்டன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அணி மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளது என்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement