1 மணிநேரம் போதும்.. இதை செய்து இந்திய அணியை வீழ்த்துவோம்.. இங்கிலாந்து கோச் திமிர் பேச்சு

ENG Coach
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை.

1 மணி நேரத்தில் இந்திய அணியை வீழ்த்துவோம் : இங்கிலாந்து கோச் பேட்டி

அதேவேளையில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நிலையுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் சரி சமமான வெற்றி வாய்ப்பு உள்ளதால் இந்த போட்டியின் கடைசி நாள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்பாக பேசியுள்ள இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் : இந்திய அணியை கடைசி நாள் போட்டியின் ஒரு மணி நேரத்திலேயே இங்கிலாந்து அணி வீழ்த்தும் என்று ஒரு கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரம் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. அந்த நேரத்தில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து நாங்கள் போட்டிக்குள் வந்தோம். அதே போன்று போட்டியின் ஐந்தாம் நாளான இன்று முதல் ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணியின் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற மைதானத்தில் இருக்கும் ரசிகர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று பேசியுள்ளார். அவரது இந்த திமிரான பேச்சு இந்திய ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பழி தீர்த்தும் 58/4 என திணறும் இந்தியா.. கலாய்த்த ஸ்டோக்ஸ்.. 39 வருடத்தில் முடியாத சாதனை சேசிங்கை செய்யுமா?

ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கும் ஒரு வாய்ப்பு எளிதாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியை ஈசியாக வீழ்த்தி விடுவோம் என்று அவர் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை காட்டமாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement