பழி தீர்த்தும் 58/4 என திணறும் இந்தியா.. கலாய்த்த ஸ்டோக்ஸ்.. 39 வருடத்தில் முடியாத சாதனை சேசிங்கை செய்யுமா?

KL Rahul
- Advertisement -

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவும் சரியாக 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 192 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

பழி தீர்த்ததை கலாய்த்த ஸ்டோக்ஸ்:

அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 193 ரன்களை துரத்தும் இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ஜெயஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். கே.எல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் கருண் நாயர் 14, கேப்டன் கில் 6 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அப்போது இந்திய அணி நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப்பை அனுப்பியது. 4வது நாளுக்கு கடைசி ஓவரின் முந்தைய ஓவரை எதிர்கொண்ட அவர் தம்முடைய காலில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணம் கழன்றதாக கருதினார். அதனால் இந்திய அணியின் உடற்பயிற்சியாளரை வரவைத்த அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார்.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:

குறிப்பாக 3வது நாள் மாலையில் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தது பரபரப்பை உண்டாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அப்படி செய்த ஆகாஷ் தீப் இங்கிலாந்தை பழி தீர்த்தார் என்றே சொல்லலாம். ஒருவழியாக உபகரணங்களை சரியாக கட்டிக்கொண்ட ஆகாஷ் தீப் அடுத்த பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை வீசிய பிரைடன் கார்ஸ் ஏதோ சில வார்த்தைகளை சொல்லி அவரிடம் வம்பிழுத்தார்.

அதற்கு “போய் பந்தை போடுங்கள்” என்ற வகையில் ஆகாஷ் பதிலடி கொடுத்தார். மறுபுறம் ராகுல் அருகே சென்ற பென் ஸ்டோக்ஸ் “நன்றாக நேரத்தை வீணடித்து நடித்தீர்கள்” என்ற வகையில் கைதட்டி கலாய்த்தார். அதோடு நிற்காத அவர் கடைசி ஓவரில் ஆகாஷ் தீப்பை 1 ரன்னில் போல்ட்டாக்கியதால் 58/4 என 4வது நாள் முடிவில் இந்தியா திணறி வருகிறது.

இதையும் படிங்க: 5 இன்னிங்ஸில் 36 சிக்ஸ்.. 50 வருட உலக சாதனையை நொறுக்கிய இந்தியா.. இங்கிலாந்தில் புதிய சாதனை

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 150க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. 1986இல் அதிகபட்சமாக 134 ரன்கள் இலக்கை சேசிங் செய்து இந்தியா வெற்றி கண்டது. எனவே இப்போட்டியில் 39 வருடங்களில் நிகழாத சாதனை சேசிங்கை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவுக்கு களத்தில் ராகுல் 33* ரன்களுடன் உள்ளார்.

Advertisement