இனிமேல் வெளிநாட்டிலும் நாங்க தான் கில்லி.. பாகிஸ்தானை முந்திய இந்திய அணி.. அபாரமான சாதனை

INDIA Team
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடிக்கும் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அப்போது 4 – 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று மைக்கேல் வாகன் போன்ற சில முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தனர்.

ஆனால் 2வது போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587, 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 407, 271 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

பர்மிங்காமில் சரித்திர வெற்றி:

அத்துடன் பர்மிங்கம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் அங்கே பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் வெற்றி பெற்றதில்லை. விராட் கோலி கேப்டனாக வந்தது முதலே சௌரவ் கங்குலி வழியில் இந்தியா தொடர்ச்சியாக வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளைப் பெறத் துவங்கியது.

குறிப்பாக 2018/19 சீசனில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்தது. 2020/21 சீசனில் மீண்டும் அங்கே கோப்பையை வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அதன் பின் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி தென்னாபிரிக்காவிலும் 2 பெற்றது.

- Advertisement -

வெளிநாடுகளில் கில்லியாக:

அந்த வகையில் இதுவரை தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் இந்தியா மொத்தம் 30 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக சேனா வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பெற்ற ஆசிய அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் 148 போட்டிகளில் 29 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: 264 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்கிய தெ.ஆ கேப்டன் முல்தர்.. விராட் கோலியை முந்தி உலக சாதனை

76 போட்டிகளில் 9 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள இலங்கை 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியா 128 போட்டிகளில் 30 வெற்றிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் சேனா நாடுகளில் பாகிஸ்தான் வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இந்தியா அதே காலகட்டத்தில் 18 வெற்றிகளைப் பெற்று எழுச்சி கண்டுள்ள இந்தியா இனிமேல் வெளிநாடுகளில் நாங்கள் தான் ஆசியாவின் கில்லி அணி என்பதை நிரூபித்து வருகிறது.

Advertisement