எல்லா நாளும் இந்தியா அதை மிஸ் பண்ணாது.. அவரோட பவுலிங் அற்புதமானது.. சரித்திர வெற்றி பற்றி கில்

Shubman Gill
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தைப் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை நன்றாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இந்தியா வரலாற்று வெற்றி:

அடுத்ததாக 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் மீண்டும் சதமடித்து 161, ஜடேஜா 69*, ரிஷப் பண்ட் 65, ராகுல் 55 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் 608 ரன்களை துரத்திய இங்கிலாந்தை 271க்கு சுருட்டிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் வாயிலாக பார்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சரித்திரம் படைத்த இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஆகாஷ் தீப் அற்புதம்:

இந்நிலையில் கடந்தப் போட்டியை போல் இம்முறை கேட்ச்களை தவற விடாததே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டிக்கு பின் நாங்கள் பேசிய விஷயங்களில் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களுடைய பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. இது போன்ற பிட்ச்சில் 400 – 500 ரன்கள் அடித்தால் எங்களால் வெற்றியின் அருகே இருக்க முடியும் என்பது தெரியும்”

“ஒவ்வொரு முறையும் நாங்கள் நிறைய கேட்ச்களை மிஸ் செய்ய மாட்டோம். ஆகாஷ் தீப் தம்முடைய இதயத்திலிருந்து பௌலிங் செய்தார். அவர் வீசிய லென்த், இடங்கள் பந்தை இருபுறமும் நகர்த்திய விதம் அற்புதமானது. இது போன்ற பிட்ச்சில் அதை செய்வது கடினமானது. எங்களுடைய பவுலர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரை ஆட்டிப் பார்த்தது அற்புதமானது”

இதையும் படிங்க: 58 வருட.. இங்கிலாந்தின் பர்மிங்காம் கோட்டையை உடைத்த இந்தியா.. முதல் அணியாக 2 வரலாறு காணாத வெற்றி

“பிரசித் கிருஷ்ணா கூட விக்கெட்டுகள் எடுக்காவிட்டாலும் நன்றாகவே பவுலிங் செய்தார். இந்தத் தொடரை என்னுடைய பங்களிப்பால் வென்றால் கண்டிப்பாக நான் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன். கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது. அடுத்த போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாட வருவார். லார்ட்ஸ் போன்ற மைதானத்தில் உங்களுடைய நாட்டின் கேப்டனாக செயல்படுவதை விட வேறு கௌரவம் இருக்க முடியாது” எனக் கூறினார்.

Advertisement