நீக்கப்பட்ட சுதர்சன்.. பும்ரா இல்லை.. குல்தீபை சேர்க்காத காரணத்துடன் இந்திய அணியை அறிவித்த கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. மறுபுறம் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த இந்தியா மோசமான உலக சாதனை படைத்தது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்தப் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்தப் போட்டியில் அறிமுகமாகி டக் அவுட்டான சுதர்சன் இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த நிலையில் அடுத்தப் போட்டியிலேயே அவர் கழற்றி விடப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

3 மாற்றங்கள்:

அதே போல பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா இப்போட்டியில் ஓய்வெடுத்து 3வது போட்டிக்கு விளையாட வருவார் என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். அதை விட குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதைச் செய்யாத இந்திய அணி நிர்வாகம் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்துள்ளது.

பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த கேப்டன் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே தீர்மானித்திருப்போம். இந்த பிட்ச்சில் ஏதேனும் சவால் இருந்தால் அது முதல் நாளாக இருக்கும். எங்களுடைய அணியில் 3 மாற்றங்கள் செய்கிறோம்”

- Advertisement -

குல்தீப், பும்ரா இல்லை:

“நித்திஷ் ரெட்டி, சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் வருகிறார்கள். பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு பும்ரா விளையாடவில்லை. அடுத்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கே அவரை நாங்கள் அதிகம் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறோம். இந்தப் போட்டிக்கு முன்பாக நல்ல இடைவெளி கிடைத்தது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி”

இதையும் படிங்க: தோனியோட அந்த பெருமையை சஞ்சு சம்சனால் காப்பாற்ற முடியும்.. சி.எஸ்.கே வின் முடிவு சரிதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் கடந்தப் போட்டியை பார்க்கும் போது எங்களுடைய லோயர் ஆர்டர் நன்றாக விளையாடவில்லை. எனவே பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடிவெடுத்துள்ளோம்” என்று கூறினார். இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (கீப்பர்), நிதிஷ் குமார், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா.

Advertisement