2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இந்த 2 வீரர்களை மாற்றம் செய்வோம்.. கோச் ரியான் சூசகம்

Ryan Doeschate 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் காரணமாக 2வது போட்டியில் சர்துள் தாக்கூர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்பது பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் தெரிவித்துள்ளார். முதலாவதாக பர்மிங்கம் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2 ஸ்பின்னர்கள் விளையாட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். அதில் ஒருவர் ஸ்பின் ஆல் ரவுண்டர், மற்றொருவர் முதன்மை ஸ்பின்னர் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

2 மாற்றங்கள்:

அதே போல கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியும் விளையாட வாய்ப்புள்ளதாக ரியான் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2 ஸ்பின்னர்கள் விளையாடுவதற்கு மிகவும் வலுவான வாய்ப்பிருக்கிறது. எங்களிடம் உள்ள 3 பேரில் எந்த 2 ஸ்பின்னர்கள் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே கேள்வியாகும்”

“வாஷிங்டன் சுந்தர் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால் ஆல் ரவுண்டர் ஸ்பின்னர் விளையாட வேண்டுமா? அல்லது ஸ்பின்னர் விளையாடினால் போதுமா? என்பதை நாங்கள் ஆலோசித்து வருகிறோம். கண்டிப்பாக நாங்கள் பவுலிங் ஆல் ரவுண்டரை விளையாட வைப்போம். ஆஸ்திரேலிய தொடரில் நித்திஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார்”

- Advertisement -

துணை கோச் சூசகம்:

“எனவே அவரும் இங்கிலாந்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளார். கடந்த போட்டியில் நாங்கள் பவுலிங் ஆல் ரவுண்டர் விளையாட விரும்பினோம். அதனாலேயே சர்துள் தாக்கூர் வாய்ப்பு பெற்றார். தற்போது நாங்கள் புதிர்களை மாற்றியமைக்க முயற்சித்து வருகிறோம். நித்திஷ் ரெட்டி தான் எங்களுடைய முதன்மை பேட்டிங் ஆல் ரவுண்டர்”

இதையும் படிங்க: அவர் பேட்டிங் பண்ண வந்தா எல்லாரும் டிவி ஆன் பண்ணி பாக்கலாம்.. பக்கா என்டர்டெயினர் – ஹாரி ப்ரூக் பேட்டி

“எனவே இந்தப் போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்வேன்” எனக் கூறினார். இதிலிருந்து அனுபவத்தின் அடிப்படையில் ஸ்பின் ஆல் ரவுண்டராக சுந்தருக்கு பதிலாக அனுபவத்தின் அடிப்படையில் ஜடேஜாவும், முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவும் விளையாட உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. நித்திஷ் ரெட்டி வேகப்பந்து ஆல் ரவுண்டராக விளையாடுவார் என்று ரியான் டஸ்சேட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் குல்தீப், நிதிஷ் ஆகியோர் 2வது போட்டியில் விளையாடுவதற்காக சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர், தாக்கூர் கழற்றி விடப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement