இங்கிலாந்தில் சச்சின் அடிச்ச முதல் சதத்துக்கு நான் தான் காரணம்.. சுவாரசிய சம்பத்தை பகிர்ந்த ஆலன் லம்ப்

Allan Lamb
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 2013-ஆம் ஆண்டு வரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதம் மற்றும் 68 அரைசதம் என 15921 ரன்களை குவித்துள்ளார். ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

சச்சின் அடிச்ச சதத்திற்கு நான் தான் காரணம் : ஆலன் லம்ப்

கிரிக்கெட் கண்டெடுத்த மகத்தான வீரர்களில் முக்கிய வீரராக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடித்துள்ள வேளையில் இங்கிலாந்தில் அவர் முதல் முறையாக சதம் அடித்ததற்கு காரணம் நான் விட்ட கேட்ச் தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஆலன் லம்ப் சுவாரஸ்யமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த தகவலானதுக்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 1990-ஆம் ஆண்டு ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் அந்த முதல் சதத்தை பதிவு செய்திருந்தார். அதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

சச்சின் டெண்டுல்கர் 1990-ஆம் ஆண்டு ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியில் 18 வயதில் விளையாடி இருந்தார். அப்போது அவர் கொடுத்த கேட்சை நான் தான் ஸ்லிப் திசையில் இருந்து தவறவிட்டேன். அதனை பயன்படுத்தி அவர் அந்த போட்டியில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். அதன் பின்னர் நான் எப்போது சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலும் :

- Advertisement -

உங்களுடைய முதல் சதம் இங்கிலாந்தில் பதிவானதற்கு நான் தான் காரணம் என அவரிடம் கூறிக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி விராட் கோலி குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி உண்மையிலேயே ஒரு அற்புதமான வீரர். அவரிடம் அனைத்து வகையான ஷாட்டுகளும் இருக்கின்றன. வேகமாக ரன் குவிக்கும் திறனுடைய விராட் கோலி உலகின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவித்தது ஏன்? – மனம்திறந்த விராட் கோலி

ஆனால் நான் விளையாடிய காலத்தில் சிறந்த வீரர் என்றால் சுனில் கவாஸ்கரை சாண்டி சச்சினை தான் கூறுவேன். ஏனெனில் சச்சின் இங்கிலாந்து மண்ணிலும் சரி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சரி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என ஆலன் லம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement